தமிழக அரசுக்கு அபராதம் விதிக்கவேண்டும்! உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு!! - Seithipunal
Seithipunal


காவிரியின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணையை கட்ட கர்நாடகா அரசுக்கு,மத்திய அரசு ஒப்புதல் வழங்கியதாக செய்திகள் வெளியாகியது. 

இதற்கு தமிழகம் சார்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இது தொடர்பாக பிரதமருக்கு, தமிழக முதல்வர் கடிதம் எழுதினார். மேலும், காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கடும் எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டபேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தமிழக அரசு தொடர்ந்தது. 
 
தமிழக அரசு தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இன்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்தது. அதில், மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகாவுக்கு அளிக்கப்படவில்லை. இது போன்ற அனுமதி அளிப்பதற்கு முன் சம்பந்தப்பட்ட மாநிலங்களுடன் ஆலோசித்த பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்தது. 

மேலும், எந்த ஆதாரமும் இல்லாமல் மத்திய அரசுக்கு எதிராக தவறான குற்றச்சாட்டுகளை தமிழக அரசு முன் வைத்துள்ளது. மேகதாதுவில் அணை கட்ட அனுமதி தராத நிலையில் தமிழக அரசின் அவமதிப்பு வழக்கை உரிய அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Center Government in Supreme Court


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தற்போது வழங்கப்பட்டுள்ள தளர்வுகள்..
கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தற்போது வழங்கப்பட்டுள்ள தளர்வுகள்..
Seithipunal