சி.பி.ஐ. விசாரணையால் எந்த பலனும் இல்லை -கரூர் விவகாரம் குறித்து சீமான் பதில்!
CBI investigation has yielded no results Seemans response regarding the Karur case
சிறுநீரக முறைகேடு வழக்கில் நீதிமன்றம் அமைத்த விசாரணை குழுவை தமிழக அரசு வேண்டாம் என்று கூறுகிறது. இதில் இருந்து மாநிலத்தில் எப்படிப்பட்ட ஆட்சி நடைபெறுகிறது என்பது தெரிகிறது” என்று சீமான் கூறினார்.
கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது தொடர்பாக செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த சீமான் பேசியதாவது:”சிபிஐ விசாரணையை நாங்கள் எப்போதும் ஏற்பதில்லை. அதனை எப்போதும் ஒரு அவமானமாக நான் பார்க்கிறேன்.
எங்கள் காவல்துறை விசாரணையில் என்ன குறை?, சிபிஐ அதிகாரிகளுக்கு இரண்டு மூளை இருக்கிறதா? இத்தனை ஆண்டுகளில் சிபிஐ விசாரித்து நிரூபித்த பெரிய வழக்கு எதாவது இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பினார்.
நீதிமன்றங்கள், வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, தேர்தல் துறை, மத்திய புலனாய்வுத் துறை எல்லாம் ஆட்சியாளர்களின் 5 விரல்களைப் போன்றது.சிபிஐ விசாரணையில் என்ன கிடைக்கப் போகிறது. சிறந்த தமிழ்நாடு காவல்துறையை அவமதிக்கிறார்கள். சிபிஐ விசாரணையால் எந்த பயனும் இல்லை.
கரூர் விவகாரத்தில் விசாரணை தொடங்கவே இல்லை, அதற்குள் சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது. தவெக கரூர் வழக்கில் அஸ்ரா கர்க் விசாரணை வேண்டாம் என்று நீதிமன்றத்தில் கூறுகிறது. சிறுநீரக முறைகேடு வழக்கில் நீதிமன்றம் அமைத்த விசாரணை குழுவை தமிழக அரசு வேண்டாம் என்று கூறுகிறது. இதில் இருந்து மாநிலத்தில் எப்படிப்பட்ட ஆட்சி நடைபெறுகிறது என்பது தெரிகிறது” என்று கூறினார்.
English Summary
CBI investigation has yielded no results Seemans response regarding the Karur case