#BREAKING:: வேங்கைவயல் விவகாரம்.. "119 பேரிடம் ரத்த மாதிரி சேகரிக்க திட்டம்"..!! அதிரடி காட்டும் சிபிசிஐடி..!! - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்திய குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் இதுவரை குற்றவாளி யார் என்பது தெரியவில்லை. இந்த விவகாரம் தேசிய அளவில் பேசும் பொருளான நிலையில் காவல் துறையினர் விசாரித்து வந்த இந்த வழக்கை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்குமாறு தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார்.

சுமார் 112 நாட்களைக் கடந்த இந்த விவகாரத்தில் தற்பொழுது வரை குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் எந்த முன்னேற்றமும் இல்லை. இந்த நிலையில் குடிநீர் தொட்டியில் கலக்கப்பட்ட மனித கழிவுகளை பகுப்பாய்வுக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதன் முடிவுகள் வெளியிடப்பட்டது. இந்த ஆய்வின் முடிவில் ஒரு பெண் மற்றும் இரண்டு ஆண்களின் மனித கழிவுகள் குடிநீர் தொட்டியில் கலக்கப்பட்டதாக அதிர்ச்சி தரும் தகவல் வெளியானது.

அதன் அடிப்படையில் சிபிசிஐடி போலீஸாரால் சந்தேகிக்கப்படும் 11 பேரிடம் டிஎன்ஏ பரிசோதனை நடத்த புதுக்கோட்டை நீதிமன்றத்தின் வாயிலாக அனுமதி பெறப்பட்டது. அதன்படி வேங்கை வயல் கிராமத்தைச் சேர்ந்த 9 பேர், முத்துக்காடு கிராமத்தை சேர்ந்த ஒருவர், காவிரி நகரை சேர்ந்த ஒருவர் என 11 பேருக்கு நேற்று டிஎன்ஏ பரிசோதனை செய்வதற்கான ரத்த மாதிரிகள் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேகரிக்க திட்டமிடப்பட்டது.

ஆனால் நேற்று புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு ரத்த மாதிரிகளை வழங்க வேங்கைவயலைச் சேர்ந்த காவலர் முரளி ராஜா, முத்துக்காடு கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் மற்றும் காவேரி நகரை சேர்ந்த ஒருவர் மட்டுமே வந்திருந்தனர். அவர்களிடம் டிஎன்ஏ பரிசோதனைக்கான ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டது.

இந்த நிலையில் மீதமுள்ள 8 பேர் டிஎன்ஏ பரிசோதனைக்கான ரத்த மாதிரிகளை வழங்க மறுப்பு தெரிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே மலம் கலந்த நீரால் நாங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட எங்களையே குற்றவாளிகளாக முன்னிறுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என 8 பேரும் இரத்த மாதிரிகள் வழங்க மறுத்துள்ளனர்.

இந்த நிலையில் வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட 119 பேரிடம் ரத்த மாதிரிகளை சேகரிக்க சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர். இவர்களின் ரத்த மாதிரிகளை சேகரிக்க நீதிமன்றத்தின் மூலம் முறையாக அனுமதி பெற சிபிஐசிஐடி போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். மேலும் 11 பேரில் ரத்தம் மாதிரி தர மறுத்த 8 பேருக்கும் மீண்டும் சம்மன் அனுப்பவும் சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

CBCID plan to collect blood samples from 119 people in Vengaivyal issue


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->