#கரூர் || பெண் ஐ.டி அதிகாரியை தாக்கிய விவகாரம்.. திமுகவினர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் பாய்ந்தது..!!
Case filed in Prevention of atrocities act against DMK members
தமிழக முழுவதும் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் ஐந்தாவது நாளாக வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக செந்தில் பாலாஜியின் தம்பி, உறவினர்கள், டாஸ்மாக் ஒப்பந்ததாரர்கள், செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை தொடங்கிய பொழுது 40 இடங்கள் என கூறப்பட்ட நிலையில் தற்பொழுது 200க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் கடந்த 4 நாட்களாக அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் மட்டுமே சோதனை மேற்கொண்டு வந்த வருமானவரித்துறை அதிகாரிகள் தற்பொழுது செந்தில் பாலாஜி மற்றும் அவருடைய சகோதரர் அசோக் குமார் அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது வரை செந்தில் பாலாஜி வீடு மற்றும் அலுவலகங்களில் வருமானவரித்துறை சோதனை நடைபெறாமல் இருந்த நிலையில் அதிரடியாக நுழைந்த 10க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜியின் அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டு வரும் சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே கடந்த மே 26 ஆம் தேதி செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் குமாரின் வீட்டில் சோதனை செய்ய வந்த வருமானவரித்துறை அதிகாரிகளை சோதனை செய்ய விடாமல் தடுத்ததோடு தாக்குதல் நடத்தப்பட்டது. மேலும் அவர்கள் பயணம் செய்த கார் கண்ணாடியும் உடைக்கப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக வருமானவரித் துறை அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் 2 திமுக கவுன்சிலர்கள் உட்பட 18 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் மீது அரசு அதிகாரிகளை வேலை செய்ய விடாமல் தடுத்தல், பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் மற்றும் அனுமதியின்றி ஒன்று கூடுதல் போன்ற பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் தற்பொழுது பெண் ஐடி அதிகாரியை தாக்கியதாக பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் திமுகவினருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. சிசிடிவி காட்சிகள் மற்றும் வீடியோ காட்சிகளை வைத்து மேலும் சில திமுகவினரை போலீசார் தேடி வருகின்றனர் என்பதை குறிப்பிடத்தக்கது.
English Summary
Case filed in Prevention of atrocities act against DMK members