#நாகை || அரசு மருத்துவர் ஹிஜாப் அணிய எதிர்ப்பு தெரிவித்த பாஜக நிர்வாகி மீது வழக்கு பதிவு..!! - Seithipunal
Seithipunal


நாகை மாவட்டம் திருப்பூண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவராக  பணியாற்றி வந்த மருத்துவர் ஜன்னத் என்பவர் இரவு பணியில் இருந்து வந்துள்ளார். அப்பொழுது திருப்பூண்டி பகுதியைச் சேர்ந்த பாஜக மாவட்ட விருந்தோம்பல் பிரிவு செயலாளர் புவனேஸ்வர ராம் என்பவர் கடந்த 24ஆம் தேதி இரவு 11.30 மணி அளவில் அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளார். அப்போது மருத்துவர் எங்கே என கேள்வி எழுப்பி உள்ளார். 

அந்த சமயத்தில் மருத்துவர் ஹிஜாப் அணிந்திருந்ததால் நீங்கள் உண்மையிலேயே மருத்துவர் தானா..? ஏன் ஹிஜாப் அணிந்து உள்ளீர்கள்..? என கேள்வி எழுப்பி மருத்துவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதேபோன்று தனது செல்போனில் அரசு மருத்துவர் உடன் ஏற்பட்ட வாக்குவாதத்தை அனுமதி இன்றி பாஜக நிர்வாகி தனது செல்போனில் வீடியோ பதிவு செய்துள்ளார்.

அதேபோன்று பாஜக நிர்வாகி வீடியோ எடுப்பதையும் அரசு மருத்துவர் தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் அரசு மருத்துவருக்கு ஆதரவாக திருப்பூண்டியில்  ஆர்ப்பாட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

இது குறித்த தகவல் அறிந்த போலீசார் விசாரணை நடத்தினர். இதனையில் இரு தரப்பினரும் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் பாஜக நிர்வாகி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனால் தலைமறைவான பாஜக நிர்வாகியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Case filed against BJP executive objected to govt doctors wearing hijab


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->