நெல்லை || பற்கள் பிடுங்கிய விவகாரம் - 2 காவலர்கள் மீது வழக்கு பதிவு.! - Seithipunal
Seithipunal


நெல்லை || பற்கள் பிடுங்கிய விவகாரம் - 2 காவலர்கள் மீது வழக்கு பதிவு.!

திருநெல்வேலி மாவட்டத்தில் அம்பை உட்கோட்ட காவல் நிலையங்களில் விசாரணைக்கு அழைத்து வருபவர்களின் பற்களை பிடுங்கியதாக புகார்கள் எழுந்தன. இதனால், அம்பை உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர் சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

மேலும் அப்போதைய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உள்ளிட்ட அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக சேரன்மாதேவி உதவி ஆட்சியர் முகமது சபீர் ஆலம் முதற்கட்ட விசாரணையையும், மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி அமுதா உயர்மட்ட விசாரணையும் நடத்தினார்கள்.

இந்த வழக்கை விசாரணை செய்த நெல்லை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், பல்வீர்சிங் மீது நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து இந்த வழக்கு, சி.பி.சி.ஐ.டி. சிறப்பு குற்ற புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்டது. 

இந்நிலையில் பற்கள் புடுங்கிய விவகாரம் தொடர்பாக விக்கிரமசிங்கபுரத்தை சேர்ந்த வேதநாராயணன் என்பவர் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் படி சி.பி.சி.ஐ.டி. உதவி சூப்பிரண்டு பல்வீர்சிங், விக்கிரமசிங்கபுரம் உதவி தலைமை ஆய்வாளர் முருகேசன், விக்கிரமசிங்கபுரம் காவலர்கள் விக்னேஷ் மற்றும் மணிகண்டன் உள்ளிட்டோர் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் பாதிக்கப்பட்டோரிடம் நாளை சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர். அப்போது அரசு பல் மருத்துவர்கள் மூலம் மருத்துவ பரிசோதனை நடத்தவும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

case file on two police constable in balveer singh case issue


கருத்துக் கணிப்பு

மாணவர்களின் பெற்றோர்கள் ஸ்மார்ட் போன் வைத்திருக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியிருப்பது பற்றிய உங்கள் கருத்து?Advertisement

கருத்துக் கணிப்பு

மாணவர்களின் பெற்றோர்கள் ஸ்மார்ட் போன் வைத்திருக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியிருப்பது பற்றிய உங்கள் கருத்து?
Seithipunal
--> -->