நடுவழியில் தீப்பிடித்து எரிந்த கார்.! நடந்தது என்ன?
car fire accident in karoor at mid way
நடுவழியில் தீப்பிடித்து எரிந்த கார்.! நடந்தது என்ன?
கேரள மாநிலத்தில் உள்ள இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்தவர் லைஜீ. இவர் நேற்று இரவு தனது மனைவி நிகிதாவுடன் பெங்களூர் செல்வதற்காக தனது காரில் புறப்பட்டுச் சென்றுள்ளார். இதையடுத்து அவர் இன்று காலை கரூர் அருகே சென்றுக் கொண்டிருந்த போது, திடீரென காரின் முன்பகுதியிலிருந்து புகை வந்துள்ளது.
இதைப்பார்த்த லைஜீ உடனே காரை நிறுத்தி விட்டு மனைவியுடன் கீழே இறங்கி காரில் என்ன பிரச்சனை என்று பார்த்துள்ளார். அப்போது அந்த கார் திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது.
இதனால், அதிர்ச்சியடைந்த தம்பதியர் அந்த பகுதியில் இருந்தவர்களின் உதவியுடன் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர். அதன் படி விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், காரில் எரிந்துக் கொண்டிருந்த தீயை அணைத்தனர்.
அதற்குள் கார் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. இதற்கிடையே இந்தச் சம்பவம் குறித்து, தகவலறிந்த போலீஸார், சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேசிய நெடுஞ்சாலையில் கார் தீப்பற்றி எரிந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது
English Summary
car fire accident in karoor at mid way