விறுவிறுப்பாக நடைபெறும் வாக்குப்பதிவு.. வாக்குச்சாவடியைப் பூட்டிய சுயேச்சை வேட்பாளர்...!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் இருக்கும் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதற்கட்ட தேர்தல் இன்று காலை 7 மணியளவில் மக்கள் வாக்களிக்க தொடங்கினார்கள். இதன் காரணமாக, அனைத்து மக்களும் அவர்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றுவதற்காக அனைத்து தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு  அளிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து, அனைத்து பகுதிகளிலும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதை தொடர்ந்து, மதுரையைச் சேர்ந்த சுயேச்சை வேட்பாளர் ஒருவர் வாக்குச்சாவடியைப் பூட்டியது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மதுரை ஒத்தக்கடை பகுதியில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்குச் சுயேச்சையாகப் போட்டியிடுகிறார் முத்துக் கிருஷ்ணன். 

மேலும், அந்த பகுதியில் திமுக மற்றும் அதிமுக சார்பாகப் போட்டியிடும் வேட்பாளர்கள், ஊராட்சி ஒன்றிய பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் மக்களிடம் ஓட்டுப் போடச் சொல்வதாக காவல்துறையினரிடம் புகார் அளித்திருந்தார்கள். இதனால் ஆத்திரமடைந்த முத்துக் கிருஷ்ணன், வாக்குச்சாவடியைப் பூட்டியுள்ளார். இது குறித்து தகவல் அறிந்து வந்த மாவட்ட ஆட்சியர் தற்போது ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இதனால், அங்கு வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

candidate locked on the ballot


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..
கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..
Seithipunal