உங்களுடன் ஸ்டாலின்" முகாம்..மனுக்களுக்கு உடனடி தீர்வு காண நடவடிக்கை எடுத்த மணப்பாறை MLA!
Camp with you Stalin Manapparai MLA takes action to find immediate solutions for the people
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் M. K. Stalin அவர்கள் சிதம்பரத்தில் தொடங்கி வைத்த , "உங்களுடன் ஸ்டாலின்" முகாம் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.
அதன் தொடர்ச்சியாக மணப்பாறை தொகுதி மணப்பாறை ஒன்றியம் மலையடிப்பட்டி ஊராட்சி மற்றும் வையம்பட்டி ஊராட்சி ஒன்றியம் அமையபுரம் ஊராட்சியில் நடைபெற்ற "உங்களுடன் ஸ்டாலின்" முகாமை மாவட்ட வருவாய் அலுவலர் முன்னிலையில் தொடங்கி வைத்தார் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ப.அப்துல் சமத் எம்எல்ஏ அவர்கள்.
மணப்பாறை வட்டாட்சியர் தலைமையில் மணப்பாறை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் 13 அரசு துறை சார்ந்த அலுவலர்கள் மகளீர் உரிமை தொகை உள்ளிட்ட அனைத்து மனுக்களையும் பதிவு செய்து உரிய தீர்வுகளையும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
மாவட்ட வருவாய் அலுவலர், துணை ஆட்சியர், பங்கு தந்தை விக்டர் ஜெயபால், மணப்பாறை ஒன்றிய திமுக செயலாளர் இராமசாமி, வையம்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் சீரங்கன், காங்கிரஸ் மாவட்ட துணை தலைவர் மிலிட்டரி முருகன், மமக மாவட்ட தலைவர் பைஸ் அகமது MC, வையம்பட்டி முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் குணசேகரன், திமுக மாவட்ட சிறுபான்மை நல அமைப்பாளர் அருள் சுந்தர்ராஜன், அனியாப்பூர் செல்வம், மலையடிப்பட்டி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் பாலகுமார், மமக மாவட்ட துணை தலைவர் ஆரஞ்சு அக்பர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
English Summary
Camp with you Stalin Manapparai MLA takes action to find immediate solutions for the people