100 பேர் மாயம்... தாய்-மலேசிய எல்லையில் ரோஹிங்கியா படகு விபத்து!
Rohingya people boat down near malaise
மியான்மரின் ரக்கைன் மாநிலத்திலிருந்து புறப்பட்ட ரோஹிங்கியா அகதிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று, தாய்லாந்து மற்றும் மலேசியாவின் கடல் எல்லைப் பகுதியான லங்காவி அருகே கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சுமார் 100 பேரைக் காணவில்லை என்று தகவல்கள் வெளியாகி, பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளன.
இந்தச் சம்பவம் குறித்து அதிகாரிகள் கூறுகையில், படகில் 100-க்கும் மேற்பட்டோர் இருந்ததாகவும், இது மூன்று நாட்களுக்கு முன்பு பல படகுகளில் புறப்பட்ட சுமார் 300 ரோஹிங்கியா அகதிகளின் பெரிய குழுவில் ஒன்று என்றும் தெரிவித்துள்ளனர்.
விபத்தைத் தொடர்ந்து, இதுவரை 13 பேர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். துரதிர்ஷ்டவசமாக, பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 7 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
மீட்புப் பணிகளை மலேசிய கடல்சார் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளதுடன், கடலில் மூழ்கியவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அறிவித்துள்ளது. மீட்கப்பட்டவர்கள் அளித்த தகவலின்படி, ரோஹிங்கியாக்கள் பல ஆயிரம் ரூபாய் கொடுத்து, தரகர்கள் மூலம் இந்த மிக அபாயகரமான கடற்பயணத்தைத் தொடங்கியுள்ளனர்.
சமீப காலமாக, ரோஹிங்கியா மக்கள் அண்டை நாடுகளுக்கு அகதிகளாகச் செல்ல இதுபோன்ற ஆபத்தான பயணங்களை மேற்கொள்வதும், பல விபத்துகளில் சிக்கி உயிரிழப்பதும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
English Summary
Rohingya people boat down near malaise