அதிக சத்தத்துடன் சினிமா பாடல் ஒலிபரப்பிய பேருந்துக்கு அபராதம்! - Seithipunal
Seithipunal


பேருந்தில் சினிமா பாடல் ஒலி அதிகமாக உள்ளதை குறைக்க சொன்ன நீதிபதி அறிவுரையை அவமதித்த பேருந்துக்கு காஞ்சிபுரம் போக்குவரத்து காவல்துறை அபராதம் விதித்துள்ளது.

காஞ்சீபுரம் மாவட்ட நீதிபதியாக பணியாற்றி வருபவர் நீதிபதி செம்மல். இவர் தனது சொந்த வேலையாக திண்டிவனம் சென்று விட்டு அங்கிருந்து காஞ்சீபுரத்திற்கு தனியார் பேருந்தில் நேற்று வந்துள்ளார். அப்போது பேருந்தில் அதிக சத்தத்துடன் சினிமா பாடல் ஒலித்துக்கொண்டிருந்ததையடுத்து சத்தத்தை குறைக்கும்படி கண்டக்டரிடம் அவர் கூறியுள்ளார். 

ஆனால் அவர்கள் அதனை ஏற்று கொள்ளாமல் தொடர்ந்து சினிமா பாடல்களை அதிக சத்தத்துடன் ஒலிபரப்பியுள்ளனர். மீண்டும் ஒலியை குறைக்க கூறியும் டிரைவர் மற்றும் கண்டக்டர் இருவரும் அதனை அலட்சியப்படுத்தியுள்ளனர்.

இதனையடுத்து காஞ்சீபுரம் போக்குவரத்து காவல்துறைக்கு இது குறித்து நீதிபதி செம்மல் புகார் தெரிவித்தார். அதன் அடிப்படையில் போக்குவரத்து காவல்துறையினர் காஞ்சீபுரம் மூங்கில் மண்டபம் அருகே அந்த பேருந்தை நிறுத்தி புகார் குறித்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் அவர்களை எச்சரித்துவிட்டு, பேருந்துகு்கு அபராதம் விதித்துள்ளனர். 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Bus fined for broadcasting movie song with high volume


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->