அதிவேக காரின் கொடூரம்! துரத்திச் சென்ற காவலர் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழப்பு!
brutality speeding car policeman who chasing him dragged away and died
சென்னை பள்ளிக்கரணை அருகே நடைபெற்ற வாகனத் தணிக்கையின் போது நடந்த துயரச்சம்பவம் நகரம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மடிப்பாக்கம் பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து முதன்மை காவலர் மேகநாதன், அதிவேகமாக வந்த காரை தடுக்க முயன்றார்.

ஆனால் சைகையை புறக்கணித்த அந்த வாகனம் நிற்காமல் வேகமாகப் பாய்ந்துச்சென்றது.இதையடுத்து, மேகநாதன் தனது இருசக்கர வாகனத்தில் காரை துரத்திச் சென்றார்.
அப்போது மதுபோதையில் கார் ஓட்டி வந்த சாய்ராம், திடீரென பைக்குள் மோதியதால், காவலர் மேகநாதன் பல மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டார். கடும் காயங்களால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
உடனடியாக போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர். சம்பவத்துக்கு காரணமான சாய்ராம் கைது செய்யப்பட்டு விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த துயரமான காவலர் மரணம் சென்னை முழுவதும் வலியும் கோபமும் நிறைந்த சூழலை உருவாக்கியுள்ளது.
English Summary
brutality speeding car policeman who chasing him dragged away and died