விளையாட்டு உலகையே உலுக்கிய கொடூரம்...! சென்னையில் கபடி வீராங்கனைக்கு பாலியல் தொல்லை...! - பயிற்சியாளர் அதிரடி கைது - Seithipunal
Seithipunal


சென்னை அருகே கண்ணகி நகரைச் சேர்ந்த ராஜூ (34) கபடி பயிற்சியாளராக செயல்பட்டு வந்தார். இந்நிலையில், கண்ணகி நகர் குடிசைமாற்று வாரியக் குடியிருப்பில் வசிக்கும் கபடி வீராங்கனை ஒருவர் செம்மஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பரபரப்பான புகார் ஒன்றை அளித்தார்.

அந்த புகாரில், பயிற்சியாளர் ராஜூ தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து மிரட்டியதாகவும், தனது தாய் வீட்டில் இல்லாத நேரங்களில் வீட்டிற்கு வந்து மூன்று முறை பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் குற்றஞ்சாட்டியிருந்தார்.

மேலும், தன்னைப் போல பல மாணவிகளும் அவரால் பாதிக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டு, ராஜூ மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.

இந்தப் புகாரின் அடிப்படையில், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.

இதையடுத்து ராஜூ தலைமறைவான நிலையில், அவரை கைது செய்ய தனிப்படை காவலர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், கொடைக்கானல் பகுதியில் பதுங்கியிருந்த ராஜூவை தனிப்படை காவலர்கள் சுற்றிவளைத்து கைது செய்தனர். பின்னர் அவரை சென்னை அழைத்து வந்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

brutal incident that shook sports world Kabaddi player harassed Chennai Coach arrested


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->