மத்திய அரசுக்கு பயப்படுகிறதா த.வெ.க...? - மேடையிலேயே த.வெ.க-வின் நிலைப்பாட்டை உடைத்துப் பேசிய கனிமொழி எம்.பி...! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தி.மு.க. துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற தி.மு.க. குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி, கல்விக் கொள்கை, மொழிக் கொள்கை மற்றும் த.வெ.க. அரசின் நிலைப்பாடு குறித்து பல்வேறு கருத்துகளை வெளியிட்டார்.

அப்போது அவர் தெரிவித்திருப்பதாவது,"திராவிட முன்னேற்றக் கழகம் தொடக்கத்திலிருந்தே இருமொழிக் கொள்கையையே உறுதியாக ஆதரித்து வருகிறது. மாணவர்கள் மீது தேவையற்ற கல்விச் சுமை ஏற்படக் கூடாது என்பதுதான் எங்களின் அடிப்படை நிலைப்பாடு. எந்த மொழியையும் கற்க விரும்பும் மாணவர்களுக்கு இன்றைய உலகில் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன.

எனவே, விருப்பத்தின் அடிப்படையில் பல மொழிகளைக் கற்றுக்கொள்வதை யாரும் எதிர்ப்பதில்லை.ஆனால், பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக மும்மொழிக் கொள்கையை கட்டாயமாக திணித்து, குழந்தைகள் மீது கூடுதல் சுமையை ஏற்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

இதனை நடைமுறைப்படுத்த ஒன்றிய அரசு தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.மும்மொழிக் கொள்கை கட்டாயம் என்ற எண்ணத்தை மாணவர்களின் மனதில் விதைப்பது, அவர்களிடம் தேவையற்ற அச்சத்தையும் தன்னம்பிக்கை குறைவையும் உருவாக்கும்.

இதனால் கற்றல் திறன் பாதிக்கப்படுவதோடு, கல்வி மீதான ஆர்வமும் குறையக்கூடும் என்பதால்தான் தி.மு.க. இந்தக் கொள்கைக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

மேலும், ஒன்றிய அரசுக்கு எதிராக குரல் எழுப்பக் கூடாது என்பதே த.வெ.க. அரசின் நிலைப்பாடாக இருப்பதால், அவர்களிடம் இருந்து வேறுபட்ட அணுகுமுறையை எதிர்பார்ப்பதே பொருத்தமற்றது என்றும் கனிமொழி கருணாநிதி தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Is the Tvk afraid central government Kanimozhi MP who broke Tvk position stage


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->