படிக்கும் இடத்திலா இந்த கொடூரம்...? அரசுப் பள்ளிக்குள் புகுந்து மாணவனுக்கு கத்திக்குத்து...பின்னணி என்ன...?
Is this cruelty happening place study Entering government school and stabbing student What background
சிவகங்கை மாவட்டம் சாத்தரசன்கோட்டை அருகேயுள்ள மல்லல் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல், பள்ளி வளாகத்திலேயே கத்திக்குத்து சம்பவமாக மாறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இந்தப் பள்ளியில் பயிலும் இரண்டு பிளஸ்-2 மாணவர்களுக்கிடையே கடந்த வாரம் வகுப்பறையில் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த மோதல் ஒருகட்டத்தில் கைகலப்பாக மாறிய நிலையில், ஆசிரியர்கள் உடனடியாக தலையிட்டு இருவரையும் சமாதானப்படுத்தி எச்சரித்து அனுப்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், மதிய உணவு இடைவேளையின்போது பள்ளி வளாகத்தில் மீண்டும் இரு மாணவர்களுக்கும் இடையே வாக்குவாதம் வெடித்துள்ளது.
சிறிது நேரத்தில் அது மீண்டும் கைகலப்பாக மாறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அப்போது, தன்னிடம் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்த மாணவர், சக மாணவனை சரமாரியாக குத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் மாணவனின் முதுகு, இடுப்பு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. தாக்குதலை நடத்திய மாணவர் அங்கிருந்து தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்த மாணவனை ஆசிரியர்கள் உடனடியாக மீட்டு சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக சிவகங்கை காவலர்கள் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளி வளாகத்திற்குள் மாணவர் ஒருவர் கத்தியுடன் நுழைந்து சக மாணவனை தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Is this cruelty happening place study Entering government school and stabbing student What background