சுக்குநூறாக நொறுங்கிய லாரி..! ஆந்திராவில் இருந்து தக்காளி ஏற்றி வந்தபோது அதிகாலையில் நேர்ந்த கோரம்...! - டிரைவர் சம்பவ இடத்திலேயே பலி...! - Seithipunal
Seithipunal


ஆந்திர மாநிலத்தில் இருந்து தக்காளி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு திருவண்ணாமலை நோக்கி வந்த சரக்கு லாரி, திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அருகே கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தில் மோதியதில் ஓட்டுநர் உயிரிழந்ததுடன், உதவியாளர் படுகாயமடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த லாரியை செங்கம் அருகேயுள்ள பாய்ச்சல் கிராமத்தைச் சேர்ந்த சரவணன் (42) இயக்கி வந்தார். அவருடன் திருவண்ணாமலை பாலாஜி நகரைச் சேர்ந்த சேகரன் (42) உதவியாளராக பயணித்தார்.

நேற்று அதிகாலை கலசபாக்கம் அருகேயுள்ள கொண்டம் காரியந்தல் பகுதியில் லாரி சென்றுகொண்டிருந்தபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையோரத்தில் இருந்த மரத்தின் மீது பயங்கரமாக மோதியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் லாரியின் முன்பகுதி முழுவதுமாக நொறுங்கியது.இந்த விபத்து குறித்து தகவலறிந்த அப்பகுதி மக்கள், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்கள், கலசபாக்கம் காவலர்கள் ஆகியோர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளை மேற்கொண்டனர்.

இந்த கோர விபத்தில் ஓட்டுநர் சரவணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட உதவியாளர் சேகரன், உடனடியாக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விபத்து தொடர்பாக கலசபாக்கம் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து, விபத்துக்கான துல்லியமான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

lorry that crashed tree early morning accident occurred while it carrying tomatoes from Andhra Pradesh driver died spot


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->