முகம் தங்கம் போல ஜொலிக்கணுமா? இந்த 10 பழங்களை சாப்பிட்டாலே போதும்...! இவ்வளவு நாள் இது தெரியாம போச்சேன்னு ஃபீல் பண்ணுவீங்க...!
Want your face shine like gold Just eat these 10 fruits Youll feel like youve been missing out on this for so long
பொலிவான, ஆரோக்கியமான சருமத்தை பெற பலர் பல்வேறு அழகுப் பராமரிப்பு முறைகளை பின்பற்றுகின்றனர். ஆனால், சருமத்தின் உண்மையான அழகு உடலுக்குள் இருந்து உருவாகிறது. குறிப்பாக வைட்டமின் சி, வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ மற்றும் ஆக்ஸிஜனேற்றச் சத்துகள் நிறைந்த பழங்களை தினசரி உணவில் சேர்த்துக் கொண்டால், சருமம் இயற்கையாகவே புத்துணர்ச்சியுடனும், பளபளப்புடனும் காட்சியளிக்கும். அந்த வகையில் சருமத்திற்கு அதிக நன்மை தரும் பழங்கள் குறித்து பார்க்கலாம்.
மாதுளை
ஆக்ஸிஜனேற்றச் சத்துகள் நிறைந்த மாதுளை, முதுமை அறிகுறிகள் விரைவில் தோன்றுவதை தடுக்க உதவுகிறது. இதில் உள்ள ஒமேகா–5 கொழுப்பு அமிலம் சருமத்தின் ஈரப்பதத்தை பாதுகாத்து, மென்மையான மற்றும் மிருதுவான தோற்றத்தை அளிக்கிறது.
-j3n9w.jpg)
ஆரஞ்சு
வைட்டமின் சி நிறைந்த ஆரஞ்சு, சருமத்திற்கு மிகவும் அவசியமான பழமாகும். இது கொலாஜன் உற்பத்தியை அதிகரித்து முகச் சுருக்கங்களை குறைக்க உதவுவதோடு, சூரிய ஒளியால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்தும் சருமத்தை பாதுகாக்கிறது.
அன்னாசிப்பழம்
அன்னாசிப்பழத்தில் உள்ள ப்ரோமெலைன் என்ற இயற்கை நொதி, இறந்த சருமச் செல்களை அகற்ற உதவுகிறது. மேலும், அழற்சியை குறைத்து சரும எரிச்சலை தணிப்பதன் மூலம் முகத்தை புத்துணர்ச்சியுடனும் சுத்தமாகவும் வைத்திருக்கிறது.
கிவி
வைட்டமின் சி மிக அதிகமாக உள்ள கிவி, கொலாஜன் உற்பத்தியை ஊக்குவித்து சருமத்தை உறுதியாகவும் மென்மையாகவும் வைத்திருக்கிறது. மேலும், சுற்றுச்சூழல் மாசுபாட்டால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து சருமத்தை பாதுகாக்கவும் உதவுகிறது.
வாழைப்பழம்
வைட்டமின் ஏ, பி மற்றும் ஈ சத்துகள் நிறைந்த வாழைப்பழம், சருமத்தின் இயற்கை ஈரப்பதத்தை பாதுகாக்க உதவுகிறது. இதில் உள்ள பொட்டாசியம் வறண்ட சருமத்திற்கு நீர்ச்சத்தை வழங்கி மென்மையாக்குகிறது. மேலும், ஆக்ஸிஜனேற்றச் சத்துகள் முன்கூட்டியே தோன்றும் முதுமை அறிகுறிகளை குறைக்க உதவுகின்றன.
ஆப்பிள்
வைட்டமின் ஏ, பி, சி, பொட்டாசியம் மற்றும் ஆக்ஸிஜனேற்றச் சத்துகள் நிறைந்த ஆப்பிள், சருமத்திற்கு தேவையான நீர்ச்சத்தையும் ஊட்டச்சத்தையும் வழங்குகிறது. இதில் உள்ள நார்ச்சத்து உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்ற உதவுவதால், சருமம் ஆரோக்கியமாகவும் பொலிவுடனும் காணப்படும்.
மாம்பழம்
வைட்டமின் ஏ, சி, ஈ மற்றும் பீட்டா கரோட்டின் நிறைந்த மாம்பழம், சருமத்திற்கு புத்துணர்ச்சி அளிக்கும் சிறந்த பழமாகும். சூரிய ஒளியால் ஏற்படும் பாதிப்புகளை குறைப்பதுடன், முதுமை அறிகுறிகளை தாமதப்படுத்தி சருமத்தின் இயற்கை பொலிவை மேம்படுத்துகிறது.
பப்பாளி
சருமப் பராமரிப்பில் முக்கிய இடம் பெறும் பழங்களில் பப்பாளியும் ஒன்றாகும். இதில் உள்ள பப்பைன் என்ற இயற்கை நொதி, இறந்த சருமச் செல்களை நீக்கி முகத்திற்கு இயற்கையான பொலிவை அளிக்கிறது. அதோடு வைட்டமின் ஏ, சி மற்றும் ஈ சத்துகள் சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்தை வழங்கி சேதத்திலிருந்து பாதுகாக்கின்றன.
வெள்ளரிக்காய்
அதிக நீர்ச்சத்து கொண்ட வெள்ளரிக்காய், சருமத்திற்கு உடனடி குளிர்ச்சியையும் ஈரப்பதத்தையும் வழங்குகிறது. இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் சிலிக்கா சத்து, சருமத்தின் நெகிழ்வுத்தன்மையை அதிகரித்து, வீக்கம் மற்றும் எரிச்சலை குறைத்து, நீண்ட நேரம் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவுகின்றன.
பெர்ரி வகை பழங்கள்
ஸ்ட்ராபெர்ரி, புளூபெர்ரி, ராஸ்பெர்ரி மற்றும் பிளாக்பெர்ரி போன்ற பெர்ரி வகை பழங்களில் ஆக்ஸிஜனேற்றச் சத்துகள் மிகுந்துள்ளன. இவை சருமச் செல்களை சேதப்படுத்தும் தீங்கு விளைவிக்கும் மூலக்கூறுகளை கட்டுப்படுத்துகின்றன. மேலும், கொலாஜன் உருவாக்கத்தை ஊக்குவித்து சருமத்தை உறுதியுடனும் இளமையுடனும் வைத்திருக்க உதவுகின்றன.சருமம் எப்போதும் பொலிவுடன் இருக்க வேண்டும் என்றால், செயற்கை அழகுப் பொருட்களை மட்டுமே நம்பாமல், வைட்டமின் சி, வைட்டமின் ஏ மற்றும் ஆக்ஸிஜனேற்றச் சத்துகள் நிறைந்த பழங்களை தினசரி உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் பயனுள்ளதாக நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
English Summary
Want your face shine like gold Just eat these 10 fruits Youll feel like youve been missing out on this for so long