'இனி அந்த பயமே வேண்டாம்'...! பெண்களை அச்சுறுத்தும் கேன்சரை வேரறுக்க களம் இறங்கிய கர்நாடகா...! - மெகா அதிரடி அறிவிப்பு
Karnataka takes field eradicate cancer that threatens women Mega action announcement
பெண்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக விளங்கும் கருப்பை வாய் புற்றுநோயை முழுமையாக கட்டுப்படுத்தும் நோக்கில், கர்நாடக அரசு முக்கியமான மக்கள் நலத் திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் 14 வயது நிறைவடைந்த அனைத்து சிறுமிகளுக்கும் மனித பாப்பிலோமா வைரஸ் தடுப்பூசி இலவசமாக வழங்கப்படுகிறது.

இந்தியாவில் பெண்களிடையே புற்றுநோயால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக கருப்பை வாய் புற்றுநோய் இருந்து வருகிறது. இந்த நோய் உருவாகும் அபாயத்தை ஆரம்ப நிலையிலேயே தடுக்கும் திறன் இந்த தடுப்பூசிக்கு இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக 9 முதல் 14 வயதுக்குள் இந்த தடுப்பூசியை செலுத்துவதன் மூலம், எதிர்காலத்தில் கருப்பை வாய் புற்றுநோய் உருவாகும் அபாயத்தை மிகவும் குறைக்க முடியும் என்றும் மருத்துவ வல்லுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தனியார் மருத்துவமனைகளில் அதிக செலவில் வழங்கப்படும் "கார்டாசில்-4" தடுப்பூசி, தற்போது கர்நாடக அரசின் இந்த சிறப்பு திட்டத்தின் கீழ் இலவசமாக வழங்கப்படுகிறது. 14 வயது நிறைவடைந்த அனைத்து சிறுமிகளும் இந்தத் திட்டத்தின் மூலம் பயன்பெற முடியும்.
இந்த தடுப்பூசி ஆறு மாத இடைவெளியில் இரண்டு தவணைகளாக செலுத்தப்பட உள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் அரசு சுகாதாரத் துறையின் மூலம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெற்றோர் தங்களது குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த முன்பதிவு செய்ய, மத்திய அரசின் "யு-வின்" இணையதளம் அல்லது அதற்கான செயலி மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
அதேபோல், அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களை நேரடியாக அணுகியும் இந்த சேவையை பெறலாம்.பெண் குழந்தைகளின் எதிர்கால ஆரோக்கியத்தை பாதுகாக்கும் முன்னோடியான திட்டமாக இந்த முயற்சி பார்க்கப்படுவதுடன், கருப்பை வாய் புற்றுநோயை தடுக்கும் பொது சுகாதார நடவடிக்கையில் இது முக்கியமான மைல்கல்லாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Karnataka takes field eradicate cancer that threatens women Mega action announcement