திமுக, தவெக என யார் பண்ணாலும் அது தப்புதான்...! - எம்.எல்.ஏ-க்கள் கட்சி தாவல் சர்ச்சை குறித்து பெ.சண்முகம் ஆவேசம்...!
Whoever calls it DMK or Tvk it wrong P Shanmugam furious about controversy over MLAs defecting from party
முதலமைச்சர் விஜய்யை இன்று சந்தித்து ஆலோசனை நடத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு அரசியல் மற்றும் மக்கள் நல விவகாரங்கள் குறித்து தனது கருத்துகளை வெளியிட்டார்.அப்போது அவர் தெரிவித்திருப்பதாவது,"மேகமலை மற்றும் கரூர் இனாம் நிலங்கள் தொடர்பாக பிறப்பிக்கப்பட்டுள்ள தடை உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று முதல்-அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளேன்.

நீண்டகாலமாக நீடித்து வரும் நில உரிமை பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண தனி ஆணையம் அமைக்கப்பட வேண்டும். மேகமலையில் வசித்து வரும் கிராம மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளக் கூடாது.உச்சநீதிமன்ற தீர்ப்பை காரணமாகக் கூறி நடவடிக்கை எடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
அந்தத் தீர்ப்புக்கு எதிராக மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும். அப்பகுதி மக்களுக்கு வன உரிமையும், நில உரிமையும் உறுதி செய்யப்பட வேண்டும்.இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இந்த விவகாரத்தில் இடதுசாரி கட்சிகள் ஒன்றிணைந்து ஆலோசித்து முடிவெடுக்கும்.குதிரை பேரம் போன்ற அரசியல் நடவடிக்கைகளில் யார் ஈடுபட்டாலும் அது ஜனநாயகத்திற்கு எதிரான செயலாகும்.
இதுபோன்ற சம்பவங்களுக்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். தங்களது தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் குறுகிய காலத்திலேயே பதவி விலகினால், அதற்கான காரணத்தை தொகுதி மக்கள் நேரடியாக கேள்வி கேட்க வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற நடவடிக்கைகள் குறையும்.
குதிரை பேரம் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும். இந்த கருத்து ஒரு குறிப்பிட்ட கட்சிக்காக அல்ல; தி.மு.க., த.வெ.க. உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் பொதுவானது.நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களை தங்கள் பக்கம் இழுத்து, கட்சிகளை பலவீனப்படுத்தி தனது அரசியல் வலிமையை பா.ஜ.க. அதிகரித்து வருவதாக குற்றம்சாட்டினார்.
ஆனால், இங்கு அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் முதலில் பதவியை ராஜினாமா செய்துவிட்டே மற்றொரு கட்சியில் இணைந்துள்ளனர். மேலும், அ.தி.மு.க.வில் உள்ள உட்கட்சி பிரச்சினைகளையும் இந்த விவகாரத்துடன் தொடர்புபடுத்தி பார்க்கக் கூடாது.த.வெ.க. அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி இடம்பெறும் என்ற கருத்துக்கு எந்த அடிப்படையும் இல்லை.
அந்தக் கட்சியின் அமைச்சரவையில் நாங்கள் இடம்பெறுவது என்ற கேள்விக்கே இடமில்லை. கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் அமைச்சராக வருவார் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் கூறியிருப்பது எந்த அடிப்படையில் என்பதை அவரிடமே நேரில் கேட்டு விளக்கம் பெற உள்ளேன்.
English Summary
Whoever calls it DMK or Tvk it wrong P Shanmugam furious about controversy over MLAs defecting from party