திருச்செந்தூரில் திடீர் திருப்பம்...! அண்ணாமலையின் ‘வீ த லீடர்ஸ்’ மாநாடு திடீரென ரத்து...! - பின்னணி என்ன...?
sudden turn Tiruchendur Annamalai We the Leaders conference suddenly cancelled What background
பா.ஜ.க. முன்னாள் மாநிலத் தலைவரும், முன்னாள் இந்தியக் காவல் பணி அதிகாரியுமான அண்ணாமலை, அண்மையில் அரசியல் மற்றும் சமூக விழிப்புணர்வை மையமாகக் கொண்டு "வீ த லீடர்ஸ்" என்ற மக்கள் இயக்கத்தை உருவாக்கினார். குறுகிய காலத்திலேயே இந்த இயக்கத்தில் லட்சக்கணக்கானோர் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயக்கத்தில் இணைந்துள்ள இளைஞர்கள் மற்றும் பொதுமக்களை சமூகப் பொறுப்புணர்வுடன் செயல்படச் செய்யும் பல்வேறு முன்னெடுப்புகளை அண்ணாமலை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்.அதன் ஒரு பகுதியாக, கடந்த 12-ஆம் தேதி கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் "போதையில்லா தமிழகம்" என்ற கருப்பொருளில் முதல் மாநில அளவிலான விழிப்புணர்வு மாநாடு நடைபெற்றது.
இந்த நிகழ்வில் தமிழகம் முழுவதிலிருந்தும் ஏராளமானோர் பங்கேற்று போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியை ஏற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன் தொடர்ச்சியாக, "வீ த லீடர்ஸ்" அமைப்பின் இரண்டாவது மாநாடு வருகிற 26-ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் நடைபெறும் என்று முன்பே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், திருச்செந்தூரில் நடைபெற இருந்த அந்த மாநாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இதற்குப் பதிலாக, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் இயற்கை வளங்களை பேணிக்காக்கும் நோக்கில் மாபெரும் சமூகநல விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆகஸ்ட் மாதத்தில் தூத்துக்குடியில் நடத்தப்பட உள்ளதாக "வீ த லீடர்ஸ்" அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த சுற்றுச்சூழல் சார்ந்த நிகழ்ச்சியின் துல்லியமான தேதி, நடைபெறும் இடம் மற்றும் பிற ஏற்பாடுகள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் என்றும் அமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
sudden turn Tiruchendur Annamalai We the Leaders conference suddenly cancelled What background