காதலியின் தோழியை ஆபாசமாக சித்தரித்து புகைப்படம்., போலீசார் விசாரணையில் அதிர்ச்சி வாக்குமூலம் கொடுத்த காதலன்.! - Seithipunal
Seithipunal


திருப்பூர் மாவட்டம் அவினாசி பகுதியை சேர்ந்த பெண் ஒருவரின் புகைப்படத்தை மர்ம நபர் ஒருவர் ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். 

இது குறித்து அந்தப் பெண் திருப்பூர் மாவட்ட சைபர் கிரைம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகார் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்துள்ளனர்.

விசாரணையின் போது, அந்த மர்ம நபர் நாமக்கல் மாவட்டம் கருங்குமாரன் பாளையத்தை சேர்ந்த சக்திவேல் என்பதும், அவர் காதலித்து வந்த பெண் தன்னிடம் பேசுவதை நிறுத்திவிட்டு அவினாசியை சேர்ந்த அவரது தோழியிடம் அதிகமாக பேசி வந்துள்ளதால் ஆத்திரத்தில் இது போன்ற செய்துள்ளதும் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, திருப்பூர் மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் சக்திவேலை கைது செய்தனர். பின்னர் அவர் கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

boyfriend photograph depicting the lover girlfriends


கருத்துக் கணிப்பு

இன்று வெளியான விருமன் திரைப்படம் எப்படி இருக்கிறது?Advertisement

கருத்துக் கணிப்பு

இன்று வெளியான விருமன் திரைப்படம் எப்படி இருக்கிறது?
Seithipunal