அரக்கோணத்தில் அதிர்ச்சி - ஆன்லைன் விளையாட்டால் நிலைகுலைந்த பள்ளி மாணவன்.!
boy affected for online game in ranipet arakonam
அரக்கோணத்தில் அதிர்ச்சி - ஆன்லைன் விளையாட்டால் நிலைகுலைந்த பள்ளி மாணவன்.!
இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் பகுதியைச் சேர்ந்த 11ம் வகுப்பு மாணவர் ஒருவர் செல்போனில் தொடர்ச்சியாக ஆன்லைன் கேம் விளையாடி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் விளையாட்டுக்கு முழுவதுமாக அடிமையான அந்த சிறுவன் பெற்றோருக்கு தெரியாமல் இரவிலும் தூங்காமல் கூட தொடர்ந்து விளையாடி வந்துள்ளார்.
இதனால், அந்தச் சிறுவனுக்கு மனநலம் பாதிக்கப்பட்டு, நரம்பு தளர்ச்சி ஏற்பட்டு கை, கால்களும் நிலையாக இல்லாமல் போனது. இதை கண்காணித்த பெற்றோர், உடனடியாக சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுவன் முற்றிலுமாக மனநலம் பாதித்த நிலையில் இருப்பதை கண்டறிந்து அதற்குரிய சிகிச்சை அளிக்க ஆரம்பித்துள்ளனர். அந்தச் சிறுவனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இருப்பினும் கை, கால்கள் நிலையாக இல்லாததால் அவை கட்டப்பட்டு, மேல்சிகிச்சைக்காக சென்னையில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
boy affected for online game in ranipet arakonam