அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல் - காஞ்சிபுரத்தில் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி திமுக எம்எல்ஏ எழிலரசன் வீட்டிலும், பட்டு சேலை விற்பனை செய்யும் கடையிலும் வெடிகுண்டு வைத்திருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தொலைபேசி மூலம் மிரட்டல் வந்துள்ளது.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த போலீஸார் பட்டு சேலை கடைக்கு விரைந்துச் சென்று வாடிக்கையாளர்களை உடனடியாக வெளியேற்றினர். அதன் பின்னர் மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு சோதனை பிரிவினர் உதவியுடன் கடையின் மூன்று மாடிகளிலும் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக தீவிர சோதனை மேற்கொண்டனர். 

ஆனால், அங்கு வெடிகுண்டு எதுவும் கிடைக்கவில்லை. அதே போல், காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் உள்ள திமுக எம்எல்ஏ எழிலரசன் வீட்டுக்கும் விரைந்த போலீஸார் வீட்டைச் சுற்றி அனைத்து இடங்களிலும் தீவிர சோதனை மேற்கொண்டனர். 

அங்கேயும் எந்தவிதமான வெடிகுண்டும் இல்லை என்பது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில், இரண்டு இடங்களிலும் வெடிகுண்டு இருப்பதாக மர்ம நபர் போலியாக மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. அதன் படி போலீசார் மிரட்டல் விடுத்த நபர் யார்? என்பது சைபர் கிரைம் போலீஸார் உதவியுடன் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bomb threat to dml MLA ezhilarasan house in kanchipuram


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?
Seithipunal
--> -->