அடுத்தடுத்து வரும் வெடி குண்டு மிரட்டல் - சென்னையில் பதற்றம்.!! - Seithipunal
Seithipunal


கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பொது இடங்கள், அரசு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வருவது தொடர் கதையாக உள்ளது. அதன் படி நேற்று இரவு சென்னை காமராஜர் சாலையில் உள்ள டி.ஜி.பி. அலுவலகத்திற்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். அதில், அண்ணாசாலையில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் வெடிகுண்டு வைத்துள்ளதாகவும் சிறிது நேரத்தில் அது வெடிக்க உள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இது குறித்து டி.ஜி.பி. அலுவலகத்தில் இருந்து ராயப்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததன் பேரில் போலீசார் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாயுடன் சென்று தீவிர சோதனை மேற்கொண்டனர். அதன் முடிவில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரிய வந்தது.

இதற்கிடையே, வடபழனி ஏ.வி. மெய்யப்பன் சாலையில் அமைந்துள்ள ஏ.வி.எம். ஸ்டுடியோவிலும் வெடிகுண்டு வைத்துள்ளதாக நிர்வாக அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்துள்ளது. இது குறித்து ஸ்டுடியோ மேலாளர் விஸ்வநாதன் கே.கே. நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். உடனே போலீசார் வெடிகுண்டு நிபுணர்களுடன் சென்று சோதனை நடத்தினர். இதிலும் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது.

பல்வேறு அரசு, மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும் தினமும் வெடிகுண்டு மிரட்டல்கள் தொடர்ச்சியாக விடுக்கப்பட்டு கொண்டே இருக்கும் நிலையில் மிரட்டல் விடுப்பவர்களை கண்டுபிடிப்பதற்காக சென்னை மாநகரப் போலீசார் தீவிர வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

bomb thread to avm studio and america embassy in chennai


கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...




Seithipunal
--> -->