திரையரங்குகளில் வெற்றிக்காக காத்திருப்பு! பாலையாவின் ‘அகண்டா 2’ ரிலீஸ் தேதி அறிவிப்பு...!
Waiting success theaters Balaiyas Akanda 2 release date announced
தெலுங்கு திரையுலகில் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வலிமையான கேரியரை ஏற்படுத்திய 'பாலையா', அண்மையில் தனது நடிப்பில் வெளிவந்த ‘பகவந்த் கேசரி’ படத்திற்காக சிறந்த தெலுங்கு திரைப்படம் தேசிய விருதை வென்றார்.
கடந்த 2021-ம் ஆண்டு சீனு இயக்கத்தில் ‘அகண்டா’ என்ற படத்தில் நடித்து, அதில் பிரக்யா ஜெய்ஸ்வால்,அவினாஷ், விஜி சந்திரசேகர், ஜகபதி பாபு, பூர்ணாஉள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

அப்படம் 2021-ம் ஆண்டு வெளியான தெலுங்கு படங்களில் அதிக வசூல் செய்யும் படங்களில் ஒன்றாக அமைந்தது.அந்த வெற்றியினை தொடர்ந்து ‘அகண்டா 2’ உருவாகி வருகிறது.
முதல் பாகத்தில் பணிபுரிந்த தொழில்நுட்பக் குழுவும், இசையமைப்பாளர் தமன் 2ம் பாகத்திலும் மீண்டும் இணைந்து பணிபுரிகிறார்கள்.
அண்மையில் வெளியீட்டுக்கான திட்டம் சில காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டிருந்த ‘அகண்டா 2’ படம், டிசம்பர் 5-ந்தேதி அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், அந்த நாளே பிரபாஸ் நடித்த ‘ராஜா தி சாப்’ படம் கூட வெளியாகி, ஒரே நாளில் 2 பெரிய பான் இந்திய படங்கள் வெளியாகும் அபூர்வ நிகழ்வு உருவாகிறது.
English Summary
Waiting success theaters Balaiyas Akanda 2 release date announced