அம்மனாக சோகத்தில் நயன்தாரா! -மூக்குத்தி அம்மன் 2’ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு வைரல்!
Nayanthara sad state Amman Mookuthi Amman 2 first look poster release goes viral
ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடித்த ‘மூக்குத்தி அம்மன்’ (2020) வெற்றிகரமாக வெளியாகி, ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. அந்த வெற்றியைத் தொடர்ந்து தற்போது ‘மூக்குத்தி அம்மன் 2’ உருவாகி வருகிறது.இம்முறை படத்தை சுந்தர் சி இயக்க, ரௌடி பிக்சர்ஸ் மற்றும் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் இணைந்து தயாரிக்கின்றன.

முதல் பாகத்தை விட 2ம் பாகம் இன்னும் பிரமாண்டமாக உருவாகும் என படக்குழு திட்டமிட்டுள்ளது.இதில் நயன்தாரா மீண்டும் அம்மனாக நடிக்க, அவருடன் ரெஜினா கசாண்ட்ரா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும், கடந்த மார்ச் மாதம் படத்தின் பூஜை விமர்சையாக நடந்தது.
தற்போது படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது.இந்நிலையில், ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அதில், அம்மனாக தோன்றும் நயன்தாரா சோகத்தில் அமர்ந்திருக்கும் தோற்றத்தில் காட்சியளிக்கிறார்.
அந்த போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.இதில் சிறப்பு என்னவென்றால், சுந்தர் சி மற்றும் நயன்தாரா முதல் முறையாக இணையும் படம் என்பதால், ‘மூக்குத்தி அம்மன் 2’ குறித்து ரசிகர்களின் எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது.
English Summary
Nayanthara sad state Amman Mookuthi Amman 2 first look poster release goes viral