‘காந்தாரா சாப்டர் 1’ விமர்சனம் – வரலாற்றை மீண்டும் உயிர்ப்பிக்கும் ரிஷப் ஷெட்டியின் மாபெரும் படம்! - Seithipunal
Seithipunal


ஹோம்பலே ஃபிலிம்ஸ் தயாரிப்பில், நடிகர்–இயக்குநர் ரிஷப் ஷெட்டி இயக்கியுள்ள ‘காந்தாரா சாப்டர் 1’ இன்று மாலை ப்ரீமியர் காட்சிகளுடன் வெளியாகிறது. அக்டோபர் 2-ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் படம் வெளியாக உள்ளது.

முதல் பாகத்தின் சாதனைகள் காரணமாகவே, இந்தப் படத்தின் மீது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. ருக்மணி வசந்த் நாயகியாக நடித்திருக்கும் இப்படத்தில், ஜெயராம், குல்ஷன் தேவையா, ராகேஷ் பூஜாரி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சலுவே கௌடா இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு, அரவிந்த் கஷ்யப் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கே.எம். பிரகாஷ் மற்றும் ஷோபித் ஷெட்டி இணைந்து படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளனர். இசையமைப்பை அஜனீஷ் லோக்நாத் செய்துள்ளார்.

‘காந்தாரா சாப்டர் 1’ கி.பி. 4 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கர்நாடகத்தின் தொலைதூரப் பகுதியை மையமாகக் கொண்டு, முதல் கன்னட வம்சமான கதம்ப வம்சத்தின் காலத்தைப் பதிவு செய்கிறது. விஜயேந்திர மன்னரின் ஆட்சிக் காலத்தில், தெய்வீக சக்திக்கும் ஒரு ராணிக்கும் இடையிலான மோதல் கதையின் மையமாக அமைகிறது. அக்காலத்தின் கலாச்சாரம், சடங்குகள், மக்களின் பக்தி மற்றும் மூடநம்பிக்கைகள் படம் முழுவதும் பிரதிபலிக்கப்படுகின்றன.

ஒரு இளவரசி (ருக்மணி வசந்த்) மற்றும் கிராமத்து இளைஞன் இடையேயான காதலும் கதையின் முக்கிய அம்சமாக உள்ளது. வரலாற்றுப் பின்னணியை வெளிப்படுத்தும் காட்சியமைப்புகள் மற்றும் ரிஷப் ஷெட்டியின் நடிப்பு படத்தின் பலமாகக் கருதப்படுகின்றன.

தணிக்கை குழுவின் மறுஆய்வில், கதையையும் கதாபாத்திரங்களையும் வெளிப்படுத்திய விதத்தால் படக்குழுவினர் பாராட்டைப் பெற்றனர். குழுவினர் குறிப்பிட்ட ஒரு காட்சியை நீக்குமாறு பரிந்துரைத்ததையடுத்து, சிறிய மாற்றத்துடன் படத்திற்கு ‘U/A’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

169 நிமிடங்கள் (2 மணி 49 நிமிடங்கள்) ஓட்ட நேரம் கொண்டுள்ள இப்படம், சமீபத்திய கன்னடத் திரைப்படங்களில் நீளமான படங்களில் ஒன்றாகும். வரலாற்றுப் பின்னணியை விரிவாகப் பதிவு செய்ய வேண்டியதால் இப்படம் நீளமாக அமைந்ததாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட காந்தாரா படத்தின் 400 கோடி வசூலுக்கு முக்கிய காரணம் இந்தி ரசிகர்களின் ஆதரவு தான். அதுபோலவே, காந்தாரா சாப்டர் 1 கன்னடம் மற்றும் இந்தி ரசிகர்களையும் கவர்ந்தால், பெரிய பட்ஜெட்டில் உருவான இப்படம் ‘இண்டஸ்ட்ரி ஹிட்’ ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வரலாற்றையும், புராணத்தையும், ஆக்ஷன், த்ரில்லர் மற்றும் உணர்ச்சிப் பூர்வ அம்சங்களையும் ஒருங்கே இணைத்து, பார்வையாளர்களுக்கு புதிய அனுபவத்தைத் தரும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Kandhara Chapter 1 Review Rishab Shetty epic film that brings history back to life


கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...




Seithipunal
--> -->