2 நாள் பயணமாக ராமநாதபுரம் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்.!!
cm mk stalin going to ramanathapuram
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், முதல்வர் மு.க ஸ்டாலின் தற்போது 2 நாள் பயணமாக இன்று மாலை ராமநாதபுரம் செல்கிறார்.
அங்கு கள ஆய்வு மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். பேருந்து நிலையம், அறிவுசார் மையம், சமூக நீதி மையம் உள்ளிட்டவற்றை திறந்து வைக்கிறார்
இதனைத் தொடர்ந்து ராமநாதபுரம் அருகே புல்லங்குடி பகுதியில் நடைபெறும் பிரமாண்ட விழாவில் கலந்து கொண்டு பல்வேறு முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைக்கிறார்.

மேலும், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். ராமநாதபுரத்தில் ரூ.20 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலைய கட்டிடத்தையும் திறந்து வைக்கவுள்ளார். முதலமைச்சரின் இந்த பயணத்தை முன்னிட்டு இன்றும், நாளையும் அங்கு ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
English Summary
cm mk stalin going to ramanathapuram