'ஆட்சி, அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று கண்டிஷன் போடவில்லை' ; டி.டி.வி.தினகரன் பேட்டி..!
TTV Dinakaran says he did not condition the government to share power
மதுரையில் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் இன்று காலை பேட்டி அளித்தார். அப்போது, விஜய் மற்றும் நடிகை திரிஷா குறித்து நயினார் நாகேந்திரன் பேசியதை குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர், ‘தனிப்பட்ட விமர்சனங்களை தவிர்க்க வேண்டும். அவ்வாறு தவிர்ப்பது தான் ஆரோக்கியமான அரசியலாக இருக்கும்’ என்று பதிலளித்துள்ளார்.
அத்துடன், எங்கள் கூட்டணியில் சுமுகமான முறையில் எல்லா கட்சிகளுக்கும் தொகுதி பங்கீடு கௌரவமாக வழங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், அமமுக குக்கர் சின்னத்தில் போட்டியிடும் என்றும், ஆட்சி, அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று நாங்கள் கண்டிஷன் போடவில்லை என்று தெரிவித்துள்ளார்.
அதேநேரத்தில், எங்களைச் சேர்ந்தவர்களை அமைச்சராக வேண்டும் என்பது எனது விருப்பம் தான் என்று சொன்னேன் என்றும், ஆசை என்று சொன்னேனே தவிர நோ கண்டிஷன்ஸ் என்று குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டில் இதுவரை கூட்டணி ஆட்சிக்கு மக்கள் வாய்ப்பு தந்ததில்லை என்றும், வரும் தேர்தலில் என்ன நடக்கிறது என்று பார்க்கலாம் என்று தினகரன் தெரிவித்துள்ளார்.
English Summary
TTV Dinakaran says he did not condition the government to share power