மத்திய பிரதேசத்தில் கொடூரம்; 'இன்ஸ்டா' காதலியை கொலை செய்து சடலத்தை கழிவுநீர் தொட்டிக்குள் வீசிய திருமணமான நபர் தலைமறைவு; குடும்பத்தினர் கைது..! - Seithipunal
Seithipunal


இன்ஸ்டாகிராம் காதலியை கொடூரமாக கொலை செய்து சடலத்தை கழிவுநீர் தொட்டியில் வீசிய காதலன் குடும்பத்துடன் சிக்கிய சம்பவம் மஹாராஷ்டிராவில் நடந்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் கோண்டியா மாவட்டத்தை சேர்ந்த சியா (33) என்பவருக்கும் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் வசிக்கும் சமீர் (35) என்பவருக்கும் இடையே கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு பின்னர், காதலாக மாறியுள்ளது. 

சமீர் ஏற்கனவே திருமணமானவர் என்ற உண்மையை மறைத்து சியாவுடன் பழகியுள்ளார். இதனை அறிந்திராத  சியா, தனது குடும்பத்தை விட்டு பிரிந்து, கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு போபாலுக்கு வந்து சமீருடன் ஒரே வீட்டில் வாழ தொடங்கியுள்ளார். 

அப்போது சமீருக்கு ஏற்கனவே திருமணமாகி உள்ளத்தையும்,  அவருக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அத்துடன், சியாவுக்கும், சமீரின் மனைவிக்கும் இடையே வீட்டில் அடிக்கடி தகராறு  ஏற்பட்டு வந்துள்ளது.

அதாவது, சியா, சமீரிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறுதொடர்ந்து வற்புறுத்தியதுடன், இல்லையெனில் 5 லட்சம் ரூபாய் பணம் தர வேண்டும் என மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால், சமீர் ஆத்திரமடைந்துள்ளார். இதனையடுத்து, கடந்த திங்கட்கிழமை இரவு சியாவுடன், சமீர் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஆத்திரத்தில் சியாவின் கழுத்தை நெரித்து கொடூரமான முறையில் கொலை செய்துள்ளார். 

இந்த கொலைக்கு சமீரின் தாய், சகோதரர் மற்றும் சகோதரி ஆகியோரும் உடந்தையாக செயல்பட்டுள்ளனர். கொலைசெய்யப்பட்ட சியாவின் உடலை ஒரு பெரிய இரும்பு பெட்டிக்குள் திணித்து மூடிய இவர்கள், ஆதாரங்களை மறைப்பதற்காக நள்ளிரவில் வீட்டின் அருகே காலியாக இருந்த இடத்தில் உள்ள கழிவுநீர் தொட்டிக்குள் அந்த பெட்டியை வீசியுள்ளனர்.

இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை மாலை அந்த பகுதியில் சிறுவர்கள் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த கழிவுநீர் தொட்டியிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசுவதாக அங்கிருந்தவர்களிடம் கூறியுள்ளனர். 

இதனையடுத்து, பொதுமக்கள் அங்கு சென்று பார்த்தபோது கழிவுநீர் தொட்டிக்குள் ஒரு இரும்பு பெட்டி மிதப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்த நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கழிவுநீர் தொட்டியிலிருந்து பெட்டியை மீட்டுள்ளனர்.

பெட்டியை திறந்து பார்த்தபோது சியாவின் உடல் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. சியாவின் கையில் இருந்த விளக்கு பச்சை மற்றும் அதில் இருந்த 26-ஆம் தேதி மே மாதம் 1992-ஆம் ஆண்டு என்ற பிறந்த தேதியை அடையாளமாக கொண்டு போலீசார் அவரது தகவலை உறுதி செய்துள்ளனர். 

இந்த கொடூர கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, 24 மணிநேரத்தில் துப்பு துலக்கினர். இந்த சம்பவம் குறித்து, இன்ஸ்பெக்டர் மனோஜ் பட்வா கூறுகையில்;

மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் சுமார் நான்கு நாட்கள் பழமையானது என்றும், முதற்கட்ட விசாரணையில் சியா கழுத்து நெரித்து கொல்லப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். சியாவின் கொலைக்கு உடந்தையாக இருந்த சமீரின் தாய், சகோதரர் மற்றும் சகோதரியை கைது செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தற்போது தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளி சமீரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.  மேலும், சியாவிற்கு ஏற்கனவே மூன்று திருமணங்கள் நடந்திருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தாலும், பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே இந்த கொலையின் முழு பின்னணியும் தெரியவரும் என்று டெஹ்ரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Married man who murdered his Instagram girlfriend and dumped her body in a septic tank in Madhya Pradesh is absconding


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?


செய்திகள்



Seithipunal
--> -->