விஜய் - திரிஷா குறித்த நயினார் நாகேந்திரன் தரக்குறைவான பேச்சு; "அது அவங்க அரசியல்; என் அரசியல் இல்ல'' என கமல்ஹாசன் கருத்து..!
Kamal Haasans comment on Nayinar Nagendrans derogatory remarks about Vijay and Trisha is his politics
நேற்றையதினம் சேலம் மாவட்டம், சீலநாயக்கன் பட்டி பைபாஸ் சாலையில் உள்ள தாளமுத்து நடராஜன் திடலில், த.வெ.க. நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. அப்போது தவெக தலைவர் நடிகர் விஜய் பேசுகையில், அண்ணா தொடங்கிய கட்சியை மு.க. ஸ்டாலின் வைத்துள்ளார் என்றும், அதிமுக தொடங்கிய கட்சியை எடப்பாடி பழனிசாமி வைத்துள்ளார் என்று பேசியிருந்தார். இது தொடர்பாக, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனிடம் செய்தியாளர்களிடம் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர், பாவம், அவர் அனுபவமே இல்லாதவர். முதலில் வீட்டில் இருந்து வெளியே வர வேண்டும். திரிஷாவிடம் இருந்து வெளியே வரணும். வெளியில் வந்தால்தான் எல்லாமே நடத்த முடியும் என்று பேசியிருந்தார்.
அத்துடன், குடும்பத்தோடு நல்ல உறவு இருக்க வேண்டும். நல்ல தலைவர்கள் வழிநடத்திய இயக்கம் என்று வெளியில் சொல்ல வேண்டும் என்று பேசினார். மேலும், களத்தில் ஒரு கவுன்சிலர் கூட இல்லாதவர், எப்படி, 32 சதவீதம் வாக்குகள் இருப்பதாக சொல்கிறார்கள்.. ?இது எப்படி முடியும். நடிகர் என்பதால் இப்படி நடக்குமா? என்று கிண்டலாக பேசியுள்ளார்.

மேலும், ஒரு குடும்பஸ்தானாக வந்து கட்சியை நடத்த வேண்டும் என்றும், போட்டி என்று வந்தால் நான் அவரை பற்றி பேசவில்லை எனக்கு அவர் ஒரு ஆளே இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். கூட்டம் இருந்தால் என்ன..? விஜயகாந்துக்கு கூடாத கூட்டமா? ஓட்டு வேண்டாமா? என்று பேசியுள்ளார்.
மேலும், நானும் ஆஞ்சிநேயர் மாதிரி மலையை தாண்டுவேன் என்று நம்பிக்கை வைக்கலாம். ஆனால் முடியுமா..? அவர் ஒரு சீட் கூட ஜெயிக்க முடியாது என்று நயினார் பதிலளித்தார்.
நயினார் நாகேந்திரனின் இந்த கருத்துக்கு பலவேறு தரப்பினரிடம் இருந்தும் கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்ற நிலையில், இதுகுறித்து மாநிலங்களவை எம்.பி. கமல்ஹாசனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், "அது அவங்க அரசியல்.. என் அரசியல் இல்ல" என்று பதிலளித்துள்ளார்.
English Summary
Kamal Haasans comment on Nayinar Nagendrans derogatory remarks about Vijay and Trisha is his politics