கொச்சையாக பேசிய திமுக தலைமைக்கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு 03 ஆண்டுகள் சிறை; 20 ஆயிரம் அபராதம்; எழும்பூர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!
Egmore court sentences DMK headquarters spokesperson Sivaji Krishnamurthy to 3 years in prison and fines him Rs 20000
சர்ச்சைகளான கருத்துக்கள், கொச்சையான வார்த்தைகளை பேசி, பரபரப்புக்கு பெயர் போனவர் திமுக தலைமைக்கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூரத்தி. தற்போது தவெக தலைவர் விஜய் குறித்து பேச்சு வைரலாகி வரும் நிலையில், ஆளுநர் ரவி மற்றும் பாஜக நிர்வாகி குஷ்பூ குறித்து முன்னதாக ஆபாசமாக பேசியிருந்தார். இந்த வழக்கில் அவருக்கு 3.3 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை எழும்பூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
கடந்த, 2023. 14.06. அன்று, சென்னை கொடுங்கையூரில் நடைபெற்ற திமுக கூட்டத்தில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசும் போது, தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி மற்றும் பாஜக மாநிலத் துணைத் தலைவருமான நடிகை குஷ்பூ குறித்து ஆபாசமாக பேசியிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்தன.

இதுதொடர்பாக இது குறித்து பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கு எழும்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அதன்படி, குறித்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, திமுக தலைமைக்கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூரத்திக்கு 03 ஆண்டுகள், 03 மாதங்கங்கள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது.
அத்துடன், அவருக்கு ரூ.20,000 அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கை மேல்முறையீடு செய்வதற்கு சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு ஒரு மாதம் அவகாசமும் வழங்கியுள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவையடுத்து, சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை காவல்துறையினர் கைது செய்வார்கள் என்று கூறப்படுகிறது.
English Summary
Egmore court sentences DMK headquarters spokesperson Sivaji Krishnamurthy to 3 years in prison and fines him Rs 20000