இனி வரிசையில் நிற்க வேண்டாம்! வீட்டிலிருந்தே ரயில் டிக்கெட் புக் செய்யலாம் – ரயில்வே வழங்கும் புதிய டிஜிட்டல் சேவை - Seithipunal
Seithipunal


ரயில் நிலையங்களில் ஜெனரல் டிக்கெட், பிளாட்பார்ம் டிக்கெட் அல்லது சீசன் பாஸ் வாங்க நீண்ட வரிசையில் நிற்பது இனி கடந்த காலம். வீட்டிலிருந்தபடியே மொபைலில் சில கிளிக்குகளில் டிக்கெட் புக் செய்யும் வசதி இந்திய ரயில்வே வழங்கியுள்ளது.

பண்டிகை காலம் தொடங்கியவுடன் ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதும். ஜெனரல் டிக்கெட்டுக்காக மணிக்கணக்கில் வரிசையில் நிற்கும் நிலை மாறுகிறது. இந்திய ரயில்வே அறிமுகப்படுத்திய UTS மொபைல் ஆப் மூலம், பயணிகள் வீட்டிலிருந்தபடியே டிக்கெட் புக் செய்யலாம்.

UTS – Unreserved Ticketing System என்ற இந்த அதிகாரப்பூர்வ மொபைல் ஆப்பை, CRIS – Centre for Railway Information Systems வடிவமைத்துள்ளது. இந்த ஆப்பின் மூலம் ஜெனரல் டிக்கெட், பிளாட்பார்ம் டிக்கெட், சீசன் பாஸ் ஆகியவை எளிதாக புக் செய்யலாம்.

புக் செய்யப்பட்ட டிக்கெட், டிஜிட்டல் வடிவில் உடனடியாக உங்கள் மொபைலில் தோன்றும். பணம் செலுத்துவதும் சுலபம். UPI – Google Pay, PhonePe, Paytm போன்ற பேமெண்ட் ஆப்புகள் மூலம் பாதுகாப்பாகவும் விரைவாகவும் பணம் செலுத்தலாம்.

பயன்படுத்தும் முறை மிகவும் எளிது:

முதலில் Google Play Store அல்லது Apple App Store-இல் இருந்து UTS ஆப்பை பதிவிறக்கம் செய்யவும்.

மொபைல் எண்ணை உள்ளிட்டு கணக்கை உருவாக்கி உள்நுழையவும்.

“Book Ticket” விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து பயண நிலையம், தேதி போன்ற விவரங்களை நிரப்பவும்.

ஆன்லைனில் பணம் செலுத்தியவுடன், உங்கள் டிக்கெட் மொபைலில் கிடைக்கும்.

இந்த டிஜிட்டல் வசதி, கூட்டத்தில் வரிசையில் நிற்கும் சிரமத்தையும் நேரத்தை வீணடிக்கும் பிரச்சினையையும் தவிர்க்க உதவும். எல்லா வயதினரும் எளிதாகப் பயன்படுத்தக்கூடிய இந்த ஆப், பயணத்தை இன்னும் வசதியாக மாற்றுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

No more standing in queues You can book train tickets from home a new digital service offered by the Railways


கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...




Seithipunal
--> -->