தவெக தலைமை அலுவலகத்தில் ஆயுத பூஜை கொண்டாட்டம்.!!
ayutha poojai function celebrate in tvk head office
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கடந்த சனிக்கிழமை கரூரில் நடைபெற்ற விஜயின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர் மற்றும் ஏராளமானோர் படுகாயமடைந்தனர்.
இந்தச் சம்பவம் ஒரு திட்டமிட்ட சதியால் நடந்தது என கூறி தவெக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இதைத் தொடர்ந்து தவெக தலைவர் விஜய் கரூர் துயரம் குறித்து விளக்கம் அளித்து விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் 5 நிமிட வீடியோவையும் வெளியிட்டார்.
இந்த நிலையில், சென்னை பனையூரில் உள்ள த.வெ.க. அலுவலகத்தில் ஆயுத பூஜை கொண்டாட்டம் நடைபெற்றது. விஜயின் பிரச்சாரப் பேருந்து, பிரச்சார வேன் உள்ளிட்டவற்றிற்கு ஆயுத பூஜை நடத்தி வழிபாடு செய்யப்பட்டுள்ளது.
விஜயின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
ayutha poojai function celebrate in tvk head office