சமையலுக்கு பயன்படுத்தப்படும் இலவங்கப்பட்டையில் இவ்வளவு மருத்துவ குணமா?
benefits of lavangapattai
சுவாச கோளாறுகளை குணமாக்குவதிலும் இலவங்கப்பட்டையின் பங்கு அதிகளவில் உள்ளது.
சுக்கு, மிளகு, திப்பிலி, லவங்கப்பட்டையை 5 கிராம் எடுத்து சிறிது துளசி இலையும், கருப்பட்டியும் சேர்த்து குடிநீராக காய்ச்சி குடித்தால் மூச்சு விடுவதில் ஏற்படும் சிரமம் உடனடியாக குறையும்.
தொண்டையை அடிக்கடி செரும வைக்கும் வறட்டு இருமலுக்கு அதிமதுரத்துடன் லவங்கப்பட்டை சேர்த்து பொடியாக்கி 5 சிட்டிகை சாப்பிட்டால் நிவாரணம் கிடைக்கும்.
வயிற்றுப் புண்களை குணமாக லவங்கப்பட்டையை பயன்படுத்தலாம்.
பூஞ்சைகள் மற்றும் சில வகையான வைரஸ்களை எதிர்த்து போராட கூடியது என்பதால் லவங்கப்பட்டை சேர்ந்த உணவு பதார்த்தங்கள் அவ்வளவு எளிதாக கெட்டுப் போகாது.
தாய்ப்பாலை அதிகரிக்கும் தன்மையும் பட்டைக்கு உண்டு.
தலைபாரம் இருக்கும் போது பட்டையை நீர் விட்டு அரைத்து நெற்றியில் பற்று போட்டால் விரைவில் பாரம் இறங்கும்.
English Summary
benefits of lavangapattai