மணமணக்கும் மசாலா இட்லி..!!
masala idly recepie
தேவையான பொருட்கள்:-
பெரிய வெங்காயம், கறிவேப்பிலை, கடுகு, வெள்ளை உளுத்தம் பருப்பு, நல்லெண்ணெய், கொத்தமல்லி, பட்டை, சோம்பு, ஏலக்காய், இஞ்சி, கேசரி பவுடர், உப்பு, மிளகாய்த்தூள், இட்லி.
செய்முறை:-
முதலில் இட்லியை ஓரளவு பெரிதாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு மிக்ஸி ஜாரில் கறிவேப்பிலை, சிறிது கொத்தமல்லி, பச்சை மிளகாய், இஞ்சி, பட்டை, சோம்பு, மசாலா பொருட்களை தண்ணீர் தெளித்து அரைத்து எடுக்கவும்.
இதையடுத்து அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, கருவேப்பிலை போட்டு தாளித்து பெரிய வெங்காயம் போட்டு நன்கு வதக்கி, பின்னர் அரைத்து வைத்துள்ள விழுதை கலந்து பச்சை வாசனை போகும் அளவிற்கு வதக்க வேண்டும்.
தொடர்ந்து நறுக்கி வைத்துள்ள இட்லி துண்டுகளை சேர்த்து நன்கு கிளறி எடுத்தால் சுவையான மசாலா இட்லி தயார்.