விஜய்க்கு இரக்கமே இல்லையா..? சிஎம் சார் என்று பேசலாமா..? வீடியோவை விமர்சித்த சீமான்..!
Seeman criticized Vijays video
கரூர் விவகாரம் தொடர்பில் விஜய் பேசிய காணொளியை பார்க்கும் போது அவரது இதயத்தில் காயமோ வலியோ இருப்பது போல் தெரியவில்லை என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
விருதுநகரில் நிருபர்களிடம் பேசிய போது சீமான் இவ்வாறு விமர்சித்துள்ளதோடு மேலும் கூறியதாவது: பாஜ அரசு எங்களை நாட்டு மக்களாகவே பார்ப்பதில்லை என்றும், உத்தரப்பிரதேசம் எந்த அளவுக்கு வரி செலுத்துகிறதோ அதே தான் நாங்களும் செலுத்துகிறோம் எங்களுக்கு மட்டும் பாரபட்சம் ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அத்துடன், கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்கள் சாவிற்கு ஸ்டாலின் போகவில்லை விஜய் சென்று பார்த்தார். விஜய் கூட்டத்தில் இறந்தவர்களுக்கு ஸ்டாலின் சென்று பார்க்கிறார். விஜய் போகவில்லை என்றும், உடனடியாக பாஜக அரசு உண்மை கண்டறியும் குழுவை அனுப்புகிறது என்று விமர்சித்துள்ளார்.

தமிழக்தில் தேர்தல் வருவதால்தான் கரூரில் 41 பேர் இறந்ததற்கு உண்மை கண்டறியும் குழு வருகிறதாகவும், இதே போல் ஏன் ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களை வந்து பார்க்கவில்லை என்றும், அரசியல் என்பது மக்கள் மீது அதிகாரத்தை செலுத்துவது அல்ல. அது மக்களுக்கு ஆற்றப்படும் தொண்டு என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், அரசியல் என்பது அனைத்து உயிர்களுக்குமென தேவையையும் அதை நிறைவு செய்கிற சேவையும் ஆகும். காமராஜர் ஆட்சியில் உண்மையும் நேர்மையுமாக இருந்தது என்று சீமானை பேசியுள்ளார்.
அத்துடன், தற்போது ஊழல் லஞ்சமாக உள்ளதாகவும், இங்கு அரசியல் கட்டமைப்பே சாதி, மதம், சாராயம், திரைக்கவர்ச்சியாக உள்ளது என்றும், விஜய் பேசிய காணொளியை பார்க்கும் போது அவரது இதயத்தில் காயமோ, வலியோ இருப்பது போல் தெரியவில்லை என்று விமர்சித்துள்ளார்.

விஜய் பிரசாரத்திற்கு அந்த இடத்திற்கு போனதால் தான் அந்த நிகழ்வு ஏற்பட்டிருக்கிறது. அப்போது காரணம் யார்? என்று கேள்வி எழுப்பியுள்ளதோடு, மற்ற இடத்தில் நடக்கவில்லை இங்கே மட்டும் ஏன் நடக்கிறது என்று கேட்பது தவறு என்றும், எல்லா கூட்டத்திலும் மயங்கி விழுந்தார்கள், இங்கு கூட்ட நெரிசல் அதிகமாகி சிக்கிக் கொண்டனர். மருத்துவமனையில் கத்தியால் குத்துப்பட்டு அனுமதிக்கப்பட்டவர்களை ஒருவரைக் கூட பார்க்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
மேலும், சிஎம் சார் என்று கூப்பிடுவது சின்ன பிள்ளை விளையாட்டுக்கு கூப்பிடுவது போல் உள்ளதாகவும், அவர் மீது உங்களுக்கு மதிப்பு இல்லாமல் போகலாம். உட்கார்ந்திருக்கும் நாற்காலியில் இந்த நாட்டில் பெரும் தலைவர்கள் அமர்ந்துள்ளனர் என்றும் சுட்டிக்காட்டியதோடு, பெருந்தலைவர்கள் அமர்ந்திருந்த இடம் என்பதால் பார்த்து பேச வேண்டும் என்றும், சிஎம் சார், சிஎம் சார் என்று பேசக்கூடாது. அது தன்மையான பதிவு அல்ல. சீமான் விஜய்யை கடுமையாக விமர்சித்துள்ளார்.
English Summary
Seeman criticized Vijays video