முட்டை இட்லி எப்படி செய்வது? - இதோ உங்களுக்காக.!!
how to make egg idly
தேவையான பொருட்கள்:-
முட்டை,
பச்சை மிளகாய்,
தேங்காய் துருவல்,
சீரகம்,
உப்பு,
வாழை இலை,
வெங்காயம்.
செய்முறை:-
பச்சை மிளகாய், தேங்காய் துருவல், சீரகம், வெங்காயம் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். இதனை ஒரு பாத்திரத்தில் போட்டு உப்பு சேர்த்து கலந்து முட்டைகளை உடைத்து ஊற்றி நன்கு கலக்கவும்.
இதையடுத்து அடுப்பில் இட்லி பாத்திரத்தை வைத்து சிறிது நீர் ஊற்றி கொதிக்க வைத்து இட்லி தட்டில் வாழை இலையை வைத்து அதன் மீது முட்டை கலவையை ஊற்றி 10 நிமிடங்கள் வேக வைத்து எடுக்க முட்டை இட்லி தயார்