உலக ஆணழகன் போட்டி: 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற ராஜேந்திரன் மணி.. முதல்வரை சந்தித்து வாழ்த்து.!
Body builder rajendran mani meets CM MK Stalin
தாய்லாந்தில் நடைபெற்ற உலக ஆணழகன் போட்டியில் 5வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற ராஜேந்திரன் மணி முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.
சென்னையை அடுத்த தாம்பரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மணி. இவர் மாடம்பாக்கத்தில் சொந்தமாக உடற்பயிற்சி நிலையம் வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் தாய்லாந்து நாட்டில் உள்ள புகேட் நகரில் கடந்த 2 உலக ஆணழகன் போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில் கலந்துகொள்ள உலகம் முழுவதிலும் இருந்து 44 நாடுகள் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். இதில் 'ஹெவி வெயிட்' பிரிவில் 100 கிலோ எடை கொண்ட போட்டியாளர்களுக்கான பிரிவில் ராஜேந்திரன் மணி கலந்து கொண்டார்.

இதில், ராஜேந்திரன் மணி 5வது முறையாக உலக சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார். ஏற்கனவே இந்தியாவுக்காக இவர் 4 முறை உலக ஆணழகன் பட்டம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது 5வது முறையாக ஆணழகன் பட்டம் வென்றுள்ள ராஜேந்திரன் மணிக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் 5வது முறையாக உலக ஆணழகன் சாம்பியன் பட்டம் வென்ற ராஜேந்திரன் மணி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.
English Summary
Body builder rajendran mani meets CM MK Stalin