உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை மெரினாவில் படகுப்போட்டி.!
boat competition in merina beach uthayanithi stalin birthday
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், தி.மு.க. இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவரின் பிறந்த நாளை இளைஞர் எழுச்சி நாளாக கட்சி நிர்வாகிகள் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிகழ்ச்சிகளை 1 மாதம் அளவுக்கு நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இவரின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் திமுக சார்பில் படகுப்போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியில், ஒவ்வொரு படகிலும் நான்கு பேர் வீதம் 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். கடலில் மூன்று கிலோ மீட்டர் தூரம் சென்று மீண்டும் திரும்பும் முதல் மூன்று போட்டியாளர்களுக்கு பரிசும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, முதல் பரிசு ரூ.50 ஆயிரம், இரண்டாவது பரிசு ரூ.25 ஆயிரம், மூன்றாவது பரிசு ரூ.10 ஆயிரம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
boat competition in merina beach uthayanithi stalin birthday