10,000 ரூ.கடனுக்காக கர்ப்பிணி பெண் மற்றும் 02 குழந்தைகள் உள்பட 07 பேர் கொத்தடிமைகளாக ஈடுபடுத்திய அவலம்: ஆம்பூர் அருகே மீட்பு..!
7 people rescued after being forced into slavery for a loan of Rs 10000 near Ambur
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே ரூ.10,000 கடனுக்காக கொத்தடிமைகளாக பிடித்து வைக்கப்பட்டிருந்த 07 பேர் மீட்கப்பட்டுள்ளனர். ஆம்பூர் அருகே நாய்க்கனேரி ஊராட்சிக்கு உட்பட்ட காமனூர்தட்டு மலை கிராமத்தில் ராஜா என்பவருக்கு சொந்தமான நிலத்தை மகாவிஷ்ணு என்பவர் குத்தகை எடுத்துள்ளார்.
இவரிடம் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த இருளர் குடும்பத்தை சேர்ந்தவர்கள் ரூ.10,000 கடன் பெற்றுள்ளனர். இதில் கர்ப்பிணி பெண், 02 குழந்தைகள் உட்பட 07 பேரை தனது நிலத்தில் பணி செய்வதற்காகவும், கால்நடைகளை பராமரிப்பதற்காகவும் மகாவிஷ்ணு கொத்தடிமைகளாக ஈடுப்படுத்தியுள்ளார்.
இந்த கொடூரம் குறித்து தகவலறிந்த வாணியம்பாடி கோட்டாட்சி அலுவலர் அஜிதா பேகம், காமனூர்தட்டு மலை கிராமத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். அப்போது மகாவிஷ்ணு கொத்தடிமைகளாக ஈடுபடுத்திய கர்ப்பிணி, 02 குழந்தைகள் உட்பட 07 பேரை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
7 people rescued after being forced into slavery for a loan of Rs 10000 near Ambur