பெங்களூருவில் பரபரப்பு! பேருந்து நிலையம் அருகே 6 ஜெலட்டின் குச்சி வெடிபொருட்கள்...! அதிர்ச்சியில் மக்கள்!
Bengaluru 6 gelatin stick explosives found near bus stand People in shock
கர்நாடகாவின் பெங்களூருவில் கலாசிபல்யாவில் பேருந்து நிலையம் இருக்கிறது.இந்த பேருந்து நிலையத்திலுள்ள பொதுக்கழிவறை அருகே கேட்பாரற்ற நிலையில் சந்தேகத்திற்கு இடமான வகையில் இரு பைகள் கிடந்துள்ளன.இதுதொடர்பாக காவலருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இந்தத் தகவலறிந்து விரைந்து வந்த காவலர்கள், அந்த பைகளை சோதித்தனர். அப்போது, அந்த பைகளில் வெடிபொருட்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
சற்றும் தாமதிக்காமல் உடனடியாக வெடிகுண்டு நிபுணர்களும் பேருந்து நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.அந்த 2 பைகளிலும் மொத்தம் 6 ஜெலட்டின் குச்சி வெடிபொருட்களை காவலர்கள் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து, வெடிபொருட்களை பேருந்து நிலையத்தில் வைத்து சென்றது யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றன. அந்த ஜெலட்டின் வெடிபொருட்கள் கல்குவாரிகளில் பாறைகளை தகர்க்க பயன்படுத்தப்படும் வெடிபொருட்கள் ஆகும்.
அந்த பேருந்து நிலையத்தில் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Bengaluru 6 gelatin stick explosives found near bus stand People in shock