30000 கோடி விவகாரம்! தமிழக அரசுக்கு நெருக்கடி! ஆளுநரை கொடுத்த உறுதி! பாஜக தலைவர்கள் பேட்டி! - Seithipunal
Seithipunal


நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக வெளியான ஆடியோவின் உண்மை தன்மையை கண்டறிய வேண்டும் என, ஆளுநரிடம் நேரில் சென்று பாஜக நிர்வாகிகள் கரு.நாகராஜன், வி.பி. துரைசாமி உள்ளிட்டோர் கோரிக்கை வைத்துள்ளனர். 

ஆளுனருடனான சந்திப்புக்குப்பின் செய்தியாளர்களை சந்தித்த பாஜக நிர்வாகிகள் தெரிவித்தாவது, "அந்த ஆடியோவில் உள்ளது அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுடைய குரல் தான் என்பது எங்களுடைய நம்பிக்கை. 

அவரை குற்றவாளியாகவே நாங்கள் கருதுகிறோம். அவர் தன்னை குற்றவாளி இல்லை என்பதை நிரூபிக்கட்டும். இது குறித்து நாங்கள் நீதிமன்றத்திற்கு செல்ல தயாராகத்தான் இருக்கிறோம்.

இது திமுகவின் உள்கட்சி விவகாரம் கிடையாது. மக்களினுடைய பணம் இது. அரசாங்கத்தின் மூலம் மக்களுக்கு பயன்படுத்தக்கூடிய வேண்டிய பணம், ஒரு குடும்பத்திற்கு சென்று உள்ளது தான் எங்களுடைய குற்றச்சாட்டு.

ஸ்டாலினையும் பழனிவேல் தியாகராஜனையும் பிரிக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு கிடையாது. சபரீசன் உடைய உறவினர் தான் பழனிவேல் தியாகராஜன். அவர்கள் ஒன்றாகவே இருக்கட்டும், நன்றாகவே இருக்கட்டும். அவர்களை நாங்கள் பிரிக்க வேண்டிய அவசியமே இல்லை.

ஆனால், குறைந்த காலத்தில் 30 ஆயிரம் கோடி சம்பாதித்து விட்டதாக நிதியமைச்சர் தியாகராஜன் சொன்னது மக்களினுடைய வரிப்பணம். அது தனி மனிதனுக்கு போய்விட்டது என்பதை கண்டறிய வேண்டும் என்ற அக்கறையின் காரணமாக பாஜக பாடுபட்டுக் கொண்டிருக்கிறது" என்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

BJP Leaders Complaint To Governor for PTR leaks


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->