தமிழகத்தையே இருளில் மூழ்கடித்துவிட்டு விடியல் பயணமாம் - எல்.முருகன் பரபரப்பு குற்றச்சாட்டு.! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியில் வேல் யாத்திரைக்காக பாஜக தலைவர் வேல் முருகன் தொண்டர்களுடன் வந்து வழிபட்டார். இதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், " கருப்பர் கூட்டம் என்ற கயவர் கூட்டத்திற்கு பாடம் கற்பிக்கவும், பிரதமர் மோடியின் திட்டங்களை மக்களிடையே எடுத்துரைக்கவும், கொரோனா முன்களப்பணியாளர்ளுக்கு நன்றி தெரிவிக்கவும் வேல் யாத்திரை நடத்தப்பட்டது.

கருப்பர் கூட்டத்தை கட்டாயம் காவிக்கூட்டம் விரட்டியடிக்கும். திமுகவின் கனவு கனவாக மட்டுமே இருக்கும். கடந்த 2011 ஆம் வருடத்திற்கு முன்பு தமிழகமே மின்சாரம் இல்லாமல் இருளில் தத்தளித்து இருந்தது. தமிழகத்தை அன்று இருளில் மிதக்கவிட்ட திமுகவினர், இன்று விடியலை நோக்கி என்ற பிரச்சாரத்தை நடத்தி வருகின்றனர். அவர்களின் விடியல் பிரச்சாரம் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினருக்கு பெரும் வியப்பை தருகிறது.

உத்திரபிரதேச மாநிலத்தில் பெண்ணிற்கு ஏற்பட்ட நிலை குறித்து கனிமொழி ஆவேசமாக பேசினார். திமுக எம்.எல்.ஏ பூங்கோதை சொந்த கட்சியினர் காலில் விழுந்து அழும் போது அவர் என்ன செய்தார். 2 ஜி வழக்கை மக்கள் மனதில் இருந்து மறைக்கவே திமுக முயன்று வருகிறது. ஆங்கில புத்தாண்டு, கிருஸ்துமஸ், ரம்ஜான் பண்டிகைக்கு பொது விடுமுறை வழங்குவதை போல, தைப்பூசத்திற்கும் விடுமுறை அளிக்க வேண்டும். பழனி மற்றும் பழனி வழியாக அதிக இரயில்கள் இயக்கப்பட வேண்டும் " என்று தெரிவித்தார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

BJP L Murugan Condemn to DMK Vidyal Payanam Announcement


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->