#BREAKING:: "நபிகள் நாயகம்" குறித்து அவதூறு பேச்சு.. பாஜக பிரமுகருக்கு 163 நாட்கள் சிறை தண்டனை..!!
Bjp Kalyana raman 163 days imprisonment
கடந்த 2021 ஆம் ஆண்டு மேட்டுப்பாளையத்தில் பாஜக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசியதோடு இஸ்லாமியருக்கு எதிராக மதப் பிரச்சனையை தூண்டும் வகையிலும், தரக்குறைவாகவும் இழிவாகவும் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதேபோன்று தனது ட்விட்டர் பக்கத்திலும் நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசியிருந்தார்.
இவ்வாறு பல்வேறு தருணங்களில் கல்யாண ராமன் அவதூறாக பேசியதாக மொத்தம் அவர் மீது 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து அவரை குண்டர் தரப்பு பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.

இதனை எதிர்த்து அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி குண்டர் தடுப்புச் சட்டம் ரத்து செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இந்த வழக்கு தொடர்பாக சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் சைபர் கிரைம் போலீசார் கல்யாண ராமனுக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தனர். அதன் அடிப்படையில் இந்த வழக்கு இன்று சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கில் பாஜக பிரமுகர் கல்யாண ராமன் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட நிலையில் அவருக்கு 163 நாட்கள் சிறை தண்டனை விதித்து சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவர் ஏற்கனவே இந்த வழக்கில் 163 நாட்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இதன் காரணமாக அவதூறு வழக்கில் அவர் தண்டனை பெற்றும் சிறையில் அடைக்கப்பட வாய்ப்பில்லை என தெரியவந்துள்ளது. அவதூறு பேச்சுக்கு எதிராக சைபர் குற்றத்தில் ஒருவர் தண்டனை பெற்றது இதுவே முதன்முறையாகும்
English Summary
Bjp Kalyana raman 163 days imprisonment