அதிமுக முன்னாள் அமைச்சர்கள் அடக்கிவாசிக்க கற்றுக்கொள்ள வேண்டும் -  பாஜக தரப்பில் பகீர் எச்சரிக்கை! - Seithipunal
Seithipunal


அதிமுக - பாஜக கூட்டணி தொடருமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், பாஜகவின் விவசாய அணி மாநில தலைவர் G.K.நாகராஜ் ஒரு புதிய விளக்கத்துடன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அவரின் அந்த அறிக்கையில், "அமைச்சர் .உதயநிதி சனாதனத்தை அழிப்பேன் என்று முழங்கும்போது அதற்கு அடிப்படையாக அண்ணாவும், பெரியாரும் பேசிய வரலாற்று உண்மைகளை மக்களிடம் கொண்டு செல்வது தமிழகத்தின் பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் பாதுகாக்கும் பாஜகவின் கடமை.

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சட்டசபையில் ஜெயலலிதா அம்மையார் அவமானப்பட்டதை பாராளுமன்றத்தில் பேசியபொழுது, அதை ஏற்றுக்கொண்டு வரவேற்ற அதிமுக தலைவர்கள், சனாதனத்தை அவமதித்த  உண்மை வரலாற்றை அண்ணாமலை பேசும்போது மட்டும் கொந்தளிப்பது ஏன்?

செய்த பிழையை மறக்க திராவிடக்கட்சிகளுக்கு தனிமனித தாக்குதல் என்பது  பொதுயுக்தி.உலகின் மிகப்பெரிய கட்சி பாஜக. நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் அடிப்படை நாகரீகத்தை கற்றுத்தந்துள்ளது.

பதவியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட அதிமுக முன்னாள் அமைச்சர்கள் அடக்கிவாசிக்க கற்றுக்கொள்ள வேண்டும். பாஜகவின் பொறுமைக்கும் எல்லை உண்டு" என்று அந்த அறிவிக்கையில் தெரிவித்துள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP GK Nagaraj Warn to ADMK Ex Minister


கருத்துக் கணிப்பு

அதிமுக - பாஜக கூட்டணி உடைந்தால் யாருக்கு பயன்?Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - பாஜக கூட்டணி உடைந்தால் யாருக்கு பயன்?
Seithipunal