#சென்னை || சிறுவனிடம் அத்துமீறிய பாஜக நிர்வாகி போக்சோ சட்டத்தின் கீழ் கைது..!!
BJP executive arrested under POCSO Act for trying molesting boy
சென்னையில் பாஜகவை சேர்ந்த நிர்வாகி ஒருவர் சிறுவனுக்கு லிப்ட் கொடுப்பது போல கூட்டி வந்து பாலியல் தொல்லை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மேற்கு மாவட்டம் அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த பாலச்சந்திரன் என்ற நபர் வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுவனை தனது வண்டியில் லிப்ட் கொடுத்து ஏற்றி வந்துள்ளார்.
அப்பொழுது அந்த சிறுவனை யாரும் இல்லாத பகுதியில் அழைத்துச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தி உள்ளனர். பொதுமக்கள் நடத்திய விசாரணையில் அவர் பாஜக பூத் கமிட்டி வலிமைப்படுத்தும் இயக்கத்தைச் சேர்ந்த பாலச்சந்தர் என்பது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் அவரைப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். மேலும் அச்சிறுவனின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் பாஜக நிர்வாகியின் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
English Summary
BJP executive arrested under POCSO Act for trying molesting boy