பா.ஜ.க. நிர்வாகி மீது தாக்குதல்: தீவிர விசாரணையில் போலீசார்!
BJP Attack on administrator Police investigation
ராணிப்பேட்டை, சென்னசமுத்திரம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 36) இவர் ராணிப்பேட்டை மாவட்ட பா.ஜ.க ஓ.பி.சி அணி பொதுச் செயலாளர் பணியாற்றி வருகிறார்.
மேலும் இவர் மினரல் வாட்டர் கேன்களை கடைகளுக்கு சப்ளை செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் மதியம் வாணியன் சத்திரம் டாஸ்மாக் கடை அருகே உள்ள பெட்டிக்கடையில் தண்ணி கேன்களை சப்ளை செய்து கொண்டிருந்தார்.
அப்போது அங்கு மது போதையில் கோபி (வயது 27), சிலம்பரசன் (வயது 29) மற்றும் சிலர் பார்த்திபனிடம் தகராறில் ஈடுபட்டு சரமாரியாக அடித்துள்ளனர்.

இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த பார்த்திபனை அருகில் இருந்தவர்கள் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர்.
பின்னர் பார்த்திபன் காவேரிப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து பா.ஜ.க நிர்வாகியை தாக்கியவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
BJP Attack on administrator Police investigation