கோவை மாணவி வழக்கில், குற்றவாளிகள் குறித்த தகவல் எங்கே? மாணவியை குற்றவாளியாக்க முயற்சிக்கும் திமுக - அண்ணாமலை!
BJP Annamalai DMK Mk Stalin Kovai case
பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "திமுகவின் ஊதுகுழலாகவே மாறிவிட்ட ஒருவர், கோவை பாலியல் தாக்குதலுக்குள்ளான மாணவியின் மீதே பழியைச் சுமத்திப் பேசியிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.
குற்றவாளிகளைப் பற்றி எதுவும் கூறாமல், பாதிக்கப்பட்ட பெண்ணைப் பற்றி, முற்றிலும் பிற்போக்குத் தனமான கருத்தைத் தெரிவித்திருக்கிறார்.
திமுக ஆட்சியில், குட்டியை வைத்து ஆழம் பார்க்கும் குரங்கு கதையாக, முதலில் தனது ஊதுகுழல்களில் யாரையாவது வைத்து, பாதிக்கப்பட்ட பெண்கள் மீது குற்றம் சுமத்திச் செய்தியாக்கி, பின்னர் அந்த வழக்கை அப்படியே நீர்த்துப் போகச் செய்வது வழக்கமாகிவிட்டது. அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கிலும், மாணவியின் தனிப்பட்ட விவரங்களை பொதுவெளியில் வெளியிடும் அளவுக்குக் கீழ்த்தரமாக நடந்து கொண்டது இந்த திமுக அரசு என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
தவிர, கோவை மாணவி வழக்கில், குற்றவாளிகள் குறித்த மேலதிக தகவல்களை, காவல்துறை இதுவரை ஏன் வெளியிடவில்லை என்ற கேள்வி எழுகிறது. வழக்கம்போல, திமுக அரசில் செயலிழந்து நிற்கும் சட்டம் ஒழுங்கை மறைக்க, மடைமாற்றும் முயற்சிகளில் ஒன்றாகவே, திமுக, தனது கூட்டணிக் கட்சியினரை இது போன்று பேசத் தூண்டுவதும் கருதப்படும்.
English Summary
BJP Annamalai DMK Mk Stalin Kovai case