கோவையில் பிறந்தநாள் கொண்டாட்டம் விபரீதத்தில் முடிந்தது...! 4 இளைஞர்கள் பலி! நிகழ்ந்தவை யாவை...?
birthday celebration Coimbatore ended tragedy 4 youths died What happened
கோவை மாவட்டம் செட்டிப்பாளையம் அருகே சிறுவாணி சாலையில் நேற்று இரவு நடந்த சோகம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதிவேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தில் மோதி நொறுங்கியதில், அதில் பயணித்திருந்த நான்கு இளைஞர்கள்,பிரகாஷ் (22), ஹரிஷ் (21), சபரி (21), அகத்தியன் (20) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் பிரபாகரன் (19) என்பவர் தீவிர காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இந்த தகவல் கிடைத்தவுடன் போலீசார் விரைந்து சென்று காயமடைந்தவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், இளைஞர்கள் ஐவரும் ஒரு பிறந்தநாள் கொண்டாட்டம் முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது விபத்து நிகழ்ந்தது தெரியவந்துள்ளது. மேலும் மதுபோதையில் காரை ஓட்டியதே இந்த உயிரிழப்புக்கு காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அங்கு உயிரிழந்தவர்களில் இருவர் தஞ்சாவூரைச் சேர்ந்தவர்கள் எனவும், அனைவரும் கோவையில் உள்ள ஒரு தனியார் கார் வாஷ் நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது. அங்கு வாட்டர் வாஷ் செய்ய வந்த காரை எடுத்துக்கொண்டு கொண்டாட்டத்துக்குச் சென்றபோது இந்த துயரச்சம்பவம் நிகழ்ந்ததாக போலீஸ் தகவல் தெரிவிக்கிறது.
English Summary
birthday celebration Coimbatore ended tragedy 4 youths died What happened